ஏழை வேட்பாளர்கள் போட்டி  

சென்னை: தமிழகத்தில் நாடாளு மன்றத் தேர்தலும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர் தலும் நாளை 18ஆம் தேதி நடை பெற உள்ளது. பல அரசியல் கட் சித் தலைவர்களின் சூறாவளி  தேர்தல் பிரசாரம் நேற்று மாலை யுடன் முடிவடைந்த  நிலையில்,   நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி யிடும் தமிழகத்தைச் சேர்ந்த 31 ஏழை வேட்பாளர்கள் குறித்த விவ ரங்கள் வெளிவந்துள்ளன.
பணத்தைக் கோடி கோடியாக கொட்டி தேர்தலில் வெல்பவர்களின் மத்தியில் பணமின்றி ஏழைகளாக உள்ளவர்களும் வரலாறு காணாத வகையில் இம்முறை தேர்தல் களத் தில் குதித்துள்ளனர். 
இந்த தேர்தலில் போட்டியிடும் 30 பணக்கார வேட்பாளர்களின் பட்டியல் அண்மையில் வெளியா னது. அதுபோலவே இப்போது 31  ஏழை வேட்பாளர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது. 
இந்தப் பட்டியலில் சொந்தமாக வீடு, கார் இல்லாதவர்கள் நிறைய பேர் உள்ளனர். 
தங்களது மாத வருமானத்தை நம்பியே இவர்கள் குடும்பத்தை நடத்தி வருகின்றனர். 
இவர்களில் பெரும்பாலும் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், பாமக கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர்.
அதாவது திமுக, அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக, அமமுக போன்ற கட்சிகளைச் சேர்ந்தோர் இந்தப் பட்டியலில் ஒருவர்கூட இல்லை என்றே சொல்லலாம். 
இவர்களில் வடசென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம் மாள், தன் பேச்சில் பலமுறை கண் கலங்கி “நான் ஒரு வேளை சாப் பாடுகூட நன்றாக சாப்பிட்டது இல்லை,” என்று கூறியுள்ளார்.
காளியம்மாள் போலவே கட்சிவாரியாக 31 ஏழை வேட்பா ளர்களின் பெயர்களும் போட்டி யிடும் தொகுதி, அவர்களின் சொத்து மதிப்பு ரூ.15,000 முதல்  ரூ.35.20 லட்சம் வரை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல மக்கள் நீதி மய்ய தென்காசி வேட்பாளரோ,  “டெபாசிட் கட்டுவதற்குப் பணம் போதவில்லை. 300 ரூபாய் கடனாகத் தரமுடியுமா?” என்று தேர்தல் அதிகாரியிடமே கெஞ்சிய சம்பவமும் நடந்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon