சுடச் சுடச் செய்திகள்

அமமுக அலுவலகத்தில்  ரூ.1.50 கோடி பறிமுதல் 

தேனி: தேனி மாவட்டம், ஆண்டிப் பட்டியில் உள்ள  அமமுக அலுவல கத்தில் வருமான வரித்துறை அதி காரிகள் நேற்று முன்தினம் இரவு  முதல் நேற்று அதிகாலை வரை நடத்திய சோதனையில் சுமார் ரூ.1.50 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  
தேர்தலில் வாக்களிக்கும் வாக் காளர்களுக்கு பண ஆசை காட்டி  அவர்களின் வாக்கைப் பெறும் வேட்பாளர்களின் உத்தியைத் தடுக்க வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனைகளை ஆங்காங்கே நடத்தி வருகின்றனர். 
இதுபோல் ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக அலுவலகத்தில் நடந்த சோதனையின்போது, கட் டுக்கட்டாக ரூ.1.50 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
இந்நிலையில், “அதிமுகவின ருக்குச் சொந்தமான இடத்தில் தான் பணம் பறிமுதல் செய்யப் பட்டது. ஆனால் வருமான வரித் துறை நாடகமாடுகிறது,” என்று தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
தேர்தல் பிரசாரங்கள் முடிந்த பின்னர் வேட்பாளர்கள் யாரும் ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கக் கூடாது என்ற விதிமுறை  நடை முறையில் உள்ளது.
அந்த விதியையும் மீறி, தங்கத் தமிழ்செல்வன் நேற்று செய்தியாளர் களைச் சந்தித்துப் பேசியபோது, “எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்கவே செய்தியாளர்களைச் சந்திக்கி றேன். அமமுக அலுவலகத்தில் இருந்து பணம் கைப்பற்றப்பட வில்லை. 
“அதிமுகவினருக்குச் சொந்த மான இடத்தில் இருந்துதான் பணம் கைப்பற்றப்பட்டது. ஆனால் வருமான வரித்துறையினர் திட்டமிட்டு நாடகமாடுகின்றனர்.
“தேர்தலை நிறுத்தும் அவசியம் அமமுகவுக்கு இல்லை,” என்று கூறினார்.
பணம் வைத்திருந்த அமமுக மாவட்ட துணைச் செயலாளர் பழனி, கமன்ராஜ், பிரகாஷ், மது ஆகியோரை காவல்துறையினர் கைதுசெய்து விசாரித்து வருகின் றனர்.
வருமான வரித்துறையினர் இதுதொடர்பாக கூறுகையில், “ஆண்டிப்பட்டியில் ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் பறிமுதல் செய் யப்பட்டுள்ளது.  மீதமிருந்த பணத்தை அங்கு ஏற்பட்ட கலவரத் தில் பலரும் அள்ளிக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். 
“ஆண்டிப்பட்டியில் வாக்காளர் களுக்குப் பட்டுவாடா செய்ய ரூ.2 கோடி பணம் வந்துள்ளதாக பிடிபட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். அஞ்சல் வாக்குச் சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட் டுள்ளன. 94 உறைகளில் வாக் காளரின் பெயருடன் 300 ரூபாய் பணம் என எழுதப்பட்டிருந்தது,” என்று தெரிவித்தனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon