சுடச் சுடச் செய்திகள்

கனிமொழி: எதிர்க்கட்சியினரை குறிவைத்து வேண்டுமென்றே சோதனை

தூத்துக்குடி: எதிக்கட்சிகளைக் குறிவைத்து வேண்டுமென்றே சோதனைகளை வருமான வரித் துறை அதிகாரிகள் நடத்தி வருவதாக தூத்துக்குடி நாடாளு மன்றத் தொகுதியில்  திமுக வேட் பாளராக போட்டியிடும் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரப் பரபரப்பு ஒருவழியாக ஓய்ந்துவிட்ட நிலையில் அடுத்தடுத்து நடத்தப் படும்  வருமான வரித்துறை அதி காரிகளின் சோதனைகள் இப் போது பெரும் பரபரப்பாக உள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 18ஆம் தேதி வாக்களிப்பு நடைபெற உள்ள நிலையில், இத்தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக் குப் பணம் கொடுத்து அவர்களின் வாக்குகளை வேட்பாளர்கள்  பெற முயல்வதாக தகவல் பரவியதால் வருமான வரித்துறையினரும் தேர்தல் பறக்கும் படையினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 
இந்நிலையில்  தூத்துக்குடி, குறிஞ்சிநகர் 2வது தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்து தீவிர பிரசாரத்தில் ஈடு பட்டு வரும் கனிமொழியின் வீட்டி லும் வருமான வரித்துறை அதி காரிகள் சோதனை நடத்தினர்.  
இந்தச் சோதனையைக் கண் டித்து திமுகவினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
இதுகுறித்து கனிமொழி  செய்தியாளர்களிடம் கூறுகையில், “நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் எனது வீடு முழு வதும் சோதனை செய்தனர். ஆனால், இந்தச் சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து வேண்டுமென்றே இதுபோன்ற சோதனைகள் நடத்தப்பட்டு வரு கின்றன. எதிர்க்கட்சியினரிடம் அச்ச உணர்வை ஏற்படுத்துவதற் காகவே இவ்வாறு செயல்படுகின்ற னர். இதை நாங்கள் சந்திப்போம். இது ஜனநாயகத்துக்கு விரோத மானது,” என்று கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon