சுடச் சுடச் செய்திகள்

பேருந்து கிடைக்காமல் அவதி

தொடர் விடுமுறை மற்றும் தேர்தல் காரணமாக சென்னை யில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாக்குப்பதிவை முன்னிட்டு வியாழக்கிழமை, புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு எனத் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலை யத்தில் இருந்து ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் நேற்று முன்தினம் 600 சிறப்புப் பேருந்துகள் இயக் கப்பட்டன. ஆயிரக்கணக்கான பயணிகள் கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூர் பகுதி களில் குவிந்ததனால் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இரவு நேரத்திலும் தொடர்ந்த போக்குவரத்து நெரிசலாலும் பல மணி நேரம் பேருந்து கிடைக் காமலும் பயணிகள் கடும் அவ திக்கு உள்ளாயினர்.
இந்நிலையில், தொடர் விடு முறையை முன்னிட்டு 1,000க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகளை நேற்று அரசுப் போக்குவரத்துக் கழகம் இயக்கியதாகத் தெரிவிக் கப்பட்டது.
இந்திய நேரப்படி இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடையும். சித்திரைத் திருநாளை முன்னிட்டு மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon