சுடச் சுடச் செய்திகள்

ஏராளமான வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு

திருச்சி: தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால் வாக் களிக்க வந்த பொதுமக்கள் பலரும் அவதிக்குள்ளானார்கள். அவர்கள் மணிக்கணக்கில் காத்து நின்று வாக்களித்தனர். 
சில இடங்களில் பொறுமை இழந்த மக்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர். பின்னர் இயந்திரம் சரி செய்யப்பட்டதும் மீண்டும் வந்து வாக்களித்தனர். சிறிது நேர தாமதத்திற்கு பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியது.
கன்னியாகுமரி தொகுதியில் 50 இடங்களில் மின்னணு இயந் திரங்கள் பழுதாகின. இதனால் வாக்களிக்க வந்த பொதுமக்கள் காலதாமதம் ஆவதால் அதிருப்தி அடைந்தனர்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற் பட்ட பழுதால் வாக்குப்பதிவு நிறுத் தப்பட்டது. பொறியாளர்கள் வர வழைக்கப்பட்டு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டது. சுமார் ஒரு மணிநேரம் காத்திருந்து அமமுக வேட்பாளர் புவனேஸ்வரன் வாக்களித்தார். 
இதுபோல் பொன்மனை, பெருஞ்சாணி  வாக்குச்சாவடியிலும் அருவிக்கரை, தச்சூர் செறுகோல், அயக்கோடு, கல்லடி மாமூடு, கல் லங்குழி  வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானது.
நாகர்கோயிலில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ் ணன் வாக்களித்த எஸ்எல்பி உயர் நிலைப்பள்ளி வாக்குச்சாவடி யிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது. பின்னர் அது பழுது நீக்கப்பட்டு வாக்குப் பதிவு நடந்தது.
நாகர்கோயில் பகுதியில் மட் டும் 14 இடங்களில் இயந்திரம் பழுதானது. இதில் இருளப்பபுரம், மாதவலாயம், கிருஷ்ணன் கோயில், இறச்சகுளம் பகுதியில் இயந்திரங்களை பழுதுபார்க்க முடியாததால் வேறு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.
கிள்ளியூர் தொகுதியில் 16 இடங்களில் எந்திரங்கள் பழுது ஏற்பட்டது. 
புதுவையில் 10 வாக்குச்சாவடிகளில் எந்திரங்களில் இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. 
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon