சுடச் சுடச் செய்திகள்

தமிழகத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

சென்னை: கடந்த சில ஆண்டு களாகவே தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பிய பொதுமக் களும் அரசியல் கட்சித் தலை வர்களும் திரைப் பிரபலங்களும் தங்களுக்குப் பிடித்தவர்களைத் தேர்ந்தெடுக்க ஆவலோடு வாக் களிக்கத் திரண்டனர்.  சரியாக நேற்று காலை 7 மணி முதல் அனைத்துத் தொகுதிகளிலும் இந்த வாக்குப்பதிவு விறுவிறுப் பாக நடக்கத் தொடங்கியது. 
மக்களவைத் தேர்தலில் போட்டி யிடும் முக்கிய கட்சிகளின் வேட் பாளர்கள் அவரவர்களின் தொகுதிகளில் தங்களது வாக் கினைப் பதிவு செய்தனர்.   
சேலம் மக்களவைத் தொகுதிக் குட்பட்ட எடப்பாடியில் முதல்வர் பழனிசாமி வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்தார்.
துணை முதல்வர் ஓ.பன் னீர்செல்வம் தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரிய குளத் தில் அவர் தனது மகனும் தேனி தொகுதி அதிமுக வேட்பாளருமான ரவீந்திரநாத் குமாருடன் சென்று வாக்களித்தார்.
திமுக தலைவர் ஸ்டாலின் தேனாம்பேட்டையில் தனது  வாக்கைப் பதிவு செய்தார். அவரு டன் மனைவி துர்கா சென்றார்.
ஸ்டாலின் வாக்களித்த பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்: இன்று ஒட்டுமொத்த வாக்காளர்களும் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்து ஒரு ஆட்சி மாற்றத்தை உருவாக்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். 500, 1000, 2,000, பத்தாயிரம் வரை வாக்குக் காக விநியோகம் செய்யப்பட்டுள் ளது. நோட்டுக்கு அடிபணியாமல் ஜனநாயகத்தை மக்கள் பாது காப்பார்கள் என நம்புகிறேன்,” என்று தெரிவித்தார்.
இதுபோல் சென்னையில் பாஜக தலைவர் தமிழிசை, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், கனிமொழி ஆகியோரும் தங்களது வாக்கினைப் பதிவு செய்தனர். திமுக பொதுசெயலர் அன்பழகன் உடல்நலம் சரியில்லாததால் வாக் களிக்க சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். நாகர் கோயில் எஸ்.எல்.பி., பள்ளியில் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், கலிங்கப்பட்டியில் வைகோ வாக்களித்தனர்.
அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அடையாறில் வாக்கை பதிவிட்டார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக் குட்பட்ட திண்டிவனம் மரகதாம் பிகை உயர்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் தனது மனைவியுடன் சென்று வாக்களித்தார். வாக்குச் சாவடிகளில் போதிய வெளிச்சம் இல்லை என்றும் அது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் அவர் வலியுறுத் தினார். 
ஆளுநர் கிரண்பேடி ராஜ் நிவாசில் இருந்து வாக்களிப் பதற்காக புதுவை சுகாதாரத்துறை அலுவலகத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு வந்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வாக்களிப்பது நமது கடமை. அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். வாக் களித்ததோடு நின்றுவிடாமல், ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார் கள் என்பதையும் கண்காணிக்க வேண்டும்,” என்றார். 
இந்த தேர்தலில் முதல்முறையாக சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் சுய மாக சிந்திக்கும் வகையில் குண மடைந்த 159 பேரும்  தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். மயங்கி விழுந்து மரணம்
கோவை மாவட்டம் ஈச்சனாரி யிலுள்ள அரசு பள்ளிக்கு வாக் களிக்க வந்த ஐயம்மாள் என்ற மூதாட்டி, வேறொருவர் தனது பெயரில் வாக்களித்ததை அறிந்து  மயங்கி விழுந்து உயிரிழந்தார். 
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்த முருகேசன், சேலம் மாவட்டம் வேடப்பட்டியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்த கிருஷ்ணன், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி குருங் கூரில் வாக்களிக்க  வரிசையில் நின்ற மல்லிகா,  வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே, வாக்களிக்க வந்த மூதாட்டி  என முதியவர்கள் பலரும் மயங்கி விழுந்து உயிரிழந்தனர் என்று செய்திகள் தெரிவித்தன.

 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon