சுடச் சுடச் செய்திகள்

எதிர்க்கட்சிகளை மோடி வேட்டையாடுவதாக காங்கிரஸ் புதுப் புகார்

புதுடெல்லி: பாஜகவிடம் பணம் வெள்ளமென குவிந்து கிடப்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. 
டெல்லியில் செய்தியாளர்களி டம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல், எதிர்க்கட்சி யினரை மட்டுமே குறிவைத்து தற் போது வருமான வரிச்சோதனை நடத்தப்பட்டு வருவதாகக்  குறிப் பிட்டார்.
“நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் வறண்டு கிடக்கின்றன. ஆனால் வறட்சியால் பாதிக்கப்படுபவர் களைத்தான் குறிவைத்து சோதனை நடத்துகிறார்கள். பணத்தை கடலென குவித்து வைத்திருப்பவர்களை விட்டு விடு கிறார்கள். இதுதான் இந்திய ஜனநாயகத்துக்கும் இந்த அரசுக் கும் அழகு,” என கிண்டலாகக் குறிப்பிட்டார் கபில்சிபல்.
இதற்கிடையே எதிர்க்கட்சி களை வேட்டையாடுவதுதான் மோடி அரசின் ஒரே ஆயுதம் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா டுவிட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
வருமான வரித்துறையினரைக் கண்டு மோடி அரசாங்கம் உள் நோக்கத்துடன் சோதனை நடத்தி வருவதாக அவர் சாடியுள்ளார். 
இந்நிலையில் பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டரில் சோதனை நடத்திய தேர்தல் அதிகாரியை பணி இடைநீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இரு தினங்களுக்கு முன்னர் பிரசாரத்துக்காக ஒடிசா சென்றிருந் தார் பிரதமர் மோடி. அப்போது தேர்தல் அதிகாரி முகமது மோசின் ஹெலிகாப்டரில் திடீர் சோதனை மேற்கொண்டார். சிறப்புப் பாது காப்புப் படையினரின் பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் பிரதமர் உள்ளிட்டோருக்கு இத்தகைய சோதனையில் இருந்து விதிவிலக்கு அளித்துள்ளது தேர்தல் ஆணையம்.
இந்நிலையில் குறிப்பிட்ட அதி காரி மீது பிரதமர் மோடி அளித்த புகாரின் பேரில், இவரை விசார ணைக்குப் பின் பணி இடைநீக்கம் செய்துள்ளது தேர்தல் ஆணையம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon