இந்தியத் தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு: பல இடங்களில் தடியடி, மோதல்

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் கட்டப்பகுதி வாக்குப்பதிவு கடந்த 11ஆம் தேதி 91 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த நிலையில், 155 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 12 மாநிலங்களில் 95 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் வேலூர் தவிர்த்து 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதிக்கும் நேற்று வாக்குப் பதிவு நடந்தது.
அதேபோல், கர்நாடகா 14, மகாராஷ்டிரா 10, உத்தரப்பிரதேசம் 8, பீகார் 5, அசாம் 5, ஒடிசா 5, சட்டீஸ்கர் 3, காஷ்மீர் 2, மணிப்­பூர் 1 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. சரியாக காலை 7 மணிக்கு அனைத்துத் தொகுதிக­ளிலும் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.
காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். மாலை 6 மணிக்கு மேல் வாக்குச் சாவடிகளில் வரி­சை­யில் நின்ற வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்க­ளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகத்தின் மதுரையில் மட்டும் சித்திரைத் திரு­விழாவையொட்டி வாக்குப்பதிவு இரவு 8.00 மணி வரை நீட்டிக்கப்பட்டது.
நாடு முழுவதும் ஏழு கட்டங்­களாக தேர்தல் நடத்தப்­படும் நிலையில், பதிவாகும் வாக்குகள் வருகிற மே 23ஆம் தேதி எண் ணப்பட்டு முடிவுகள் அறி­விக்கப் படும்.
தமிழகத்தில் நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 63.73 (நாடாளுமன்றத் தேர்தல்) விழுக்காடும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குகள் 67.08 விழுக்காடும் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. அதிகபட்சமாக சிதம்பரத்தில் 70.73 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரி யில் 55.07 விழுக்காடு வாக்கு கள் பதிவாகி உள்ளன.
தமிழகத்திலும் புதுச்சேரியிலும் பல வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கும் இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது.
இருப்பினும், பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் அமைதியாகவே வாக்குப்பதிவு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
மின்னணு இயந்திரம் கோளா­றான இடங்களில் நேரத்தை அதி­கரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கோரிக்கை வைத்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் தூத்தூர் பகுதியில் வாக்காளர் பட்டியலில் 1,000 மீனவர்களின் பெயர்கள் விடுபட்டதால் மீனவர்கள் அமைதியான முறை யில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போடி அருகே, குரங்கணி, தென்றல் மலைக் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 400 வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்தனர். அடிப்படை வசதிகள் செய்யப்­படாததைக் கண்டித்து மக்கள் தேர்தல் புறக்கணித்தனர்.
அதே போல், திருப்பூர் மாவட்டத்தின் பல்லடம் அருகே மின் மயானம் அமைக்கக் கோரி 3,000க்கும் மேற்பட்டோர் தேர்த லைப் புறக்­­கணித்தனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த நாகராஜ கண்டிகை கிராமத்தில் செயல்படும் இரும்புத் தாது உருக்குத் தொழிற்சாலையை மூடக்கோரி அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 537 பேர் தேர்தலைப் புறக்கணித்தனர். அதே போல் மதுராந்தகத்தில் மருத்துவ கழிவுகளை அழிக்கும் தொழிற் சாலையை மூடக்கோரி கே.கே.புதூர் கிராம மக்கள் 1,800 பேர் தேர்தலைப் புறக்கணித் தனர்.
இன்னொரு சம்பவத்தில் சென்னை, பெரம்பூரில் வாக்குச்­ சாவடி முகவராக இருந்த நாம் தமிழர் கட்சியினர் உணவு கொடுப்­பதற்காக சாவடிக்குள் சென்றபோது அந்த முகவரை துணை ராணுவத்தினர் தாக்கி­யதாக கூறப்படு­கிறது. இதை ­­யடுத்து அந்த வாக்குச்சாவடியை முற்று­கை­யிட்ட நாம் தமிழர் கட்சி­­யினர் போராட்டத்தில் ஈடு­­பட்ட னர்.
சென்னை உள்ளிட்ட நகரங்­களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தவித்தனர். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத் தில் போலிசாருடன் மக்கள் வாக்கு­வாதம் செய்ததால் போலிசார் தடியடி நடத்தினர்.
இந்நிலையில், அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட ஆற்காடு அருகே வாக்குப்பதிவு நிறைவடை யும் நேரத்தில் பொதுமக்கள் திரண்டு வந்ததால் அவர்களைக் கலைக்க காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட் டது. இடைத்தேர்தல்கள் நடந்த பகுதி­களில் அடுத்தடுத்து மோதல்கள் நடந்ததால் பதற்றம் ஏற்­பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!