பரம வைரிகள் ஒரே மேடையில் பிரசாரம்

மெயின்புரி: அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, பகைவர் களும் இல்லை என்பது போல 24 ஆண்டுகளுக்குப் பிறகு பழைய கசப்பான அனுபவங்களை மறந்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயா வதியும் நேற்று ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம் செய்தனர்.
மெயின்புரியில் தொகுதியில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் போட்டி யிடுகிறார்.
இவரை ஆதரித்து மாயாவதி நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடு பட்டார்.
"பிரதமர் மோடியைப் போல இல்லாமல் பிற்படுத்தப்பட்ட மக் களின் உண்மையான தலைவர் முலாயம்சிங் யாதவ்," என்று மாயாவதி புகழ்ந்தார்.
கடந்த 1995ல் லக்னோவில் உள்ள விருந்தினர் மாளிகையில் தனது தொண்டர்களுடன் மாயா வதி இருந்தபோது சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த 300க்கும் மேற் பட்டோர் அவர்களை தாக்கினர்.
இதில் மாயாவதி மிகவும் அவ மானப்படுத்தப்பட்டு மிகுந்த சிரமத் துக்குப் பிறகு மீட்கப்பட்டார்.
இதன் பிறகு சமாஜ்வாடி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் எதிரிகளாகின. அப்போது முதல் 24 ஆண்டுகளாக இரு கட்சிகளும் இரு துருவங்களாக செயல்பட்டு வந்தன.
மத்தியில் ஆளும் பாஜகவை அகற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு சமாஜ்வாடி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு கை கோர்த்துள்ளன. இந்த மாநிலத்தின் எண்பது தொகுதிகளில் 75 தொகுதிகளில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுகின்றன.
இந்த நிலையில் மெயின்புரி தொகுதியில் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய முலாயம்சிங் யாதவ், "நீண்ட காலத்துக்குப் பின் நானும் மாயாவதியும் சேர்ந் துள்ளோம். பழைய விஷயங்களை மறந்து விட்டோம்," என்றார்.
இதனை வரவேற்பதாகக் கூறிய அவர், அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
"எனக்கு அளிக்கும் மரியாதையை மாயாவதிக்கும் தொண்டர்கள் அளிக்க வேண் டும்," என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!