மீண்டும் பிரசாரம்: அடுத்த சுற்றுக்கு கட்சிகள் ஆயத்தம் 

சென்னை: தமிழ்நாட்டில் நாடாளு மன்றத் தேர்தலுடன் 18 சட்டமன் றத் தொகுதிகளிலும் வாக்களிப்பு இப்போதுதான் நடந்து முடிந்தது.
அந்தச் சூடு தணிவதற்குள்ளா கவே அரசியல் கட்சிகள் அடுத்த சுற்றுப் பிரசாரத்துக்கு தயாராகிவரு கின்றன. அடுத்த மாதம் 19ஆம் தேதி திருப்பரங்குன்றம், அரவக் குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடக்கவிருக்கும் இடைத்தேர்தலை இப்போது நடந்து முடிந்த இடைத்தேர்தலைவிட மிக முக்கியமானதாக அரசியல் கட்சி கள் கருதுகின்றன.
அதிமுக, திமுக, அமமுக, மநீம, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அந்த நான்கு தொகுதி களிலும் களம் இறங்கும் என்று எதிர்பார்க்கும் நிலையில், திமுக தன்னை முன்னதாகவே தயார் படுத்திக்கொண்டு இருப்பது போல் தெரிகிறது.
திமுக தலைவர் ஸ்டாலின், நடக்கவிருக்கும் இடைத்தேர்தல் தொடர்பாக தொகுதி பொறுப்பாளர் கள், முக்கிய நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அந்த நான்கு தொகுதிகளிலும் அவர் மே 1 முதல் பிரசாரத்தைத் தொடங்குவார் என்று நேற்றைய கூட்ட முடிவில் தெரிவிக்கப்பட்டது.
அந்தக் கூட்டத்தையொட்டி மதிமுக தலைவரான வைகோ ஸ்டாலினை சந்தித்தார்.
இடைத்தேர்தல் நடக்கவிருக் கும் நான்கு தொகுதிகளில் போட் டியிடப்போகின்ற தன் வேட்பாளர் களை ஏற்கெனவே திமுக அறி வித்து இருக்கிறது.
அதிமுக இனிமேல்தான் வேட் பாளர்களை அறிவிக்கவேண்டும் என்றாலும் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் முக் கியப் புள்ளி ஒருவர் களமிறங்க இருக்கிறார் என்று பரபரப்பாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
அந்தத் தொகுதியில் நத்தம் விஸ்வநாதன் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருவதாகவும் அதற்கு அதிமுக தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் சம்மதிப்பார்கள் என்றும் அதிமுக தரப்பில் நம்பிக்கைத் தெரிவிக்கப்படுகிறது.
நத்தம் விஸ்வநாதன் ஆதர வாளர்கள் அதிமுக தலைமைபீடத் திடம் இந்தக் கோரிக்கையை வைத்து வருகிறார்கள் என்றும் கட்சித் தகவல் வட்டாரங்கள் தெரி விக்கின்றன.
செந்தில் பாலாஜி (அரவக் குறிச்சி), பொங்கலூர் பழனிசாமி (சூலூர்), பி சரவணன் (திருப்பரங் குன்றம்), எம்சி சண்முகையா (ஒட் டப்பிடாரம்) ஆகியோர் திமுக வேட் பாளர்களாக உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!