வாக்கு இயந்திர அறைக்குள் பெண்; மர்மம், விசாரணை

மதுரை: தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் 45 இடங் களில் வைக்கப்பட்டு அந்த இடங் களுக்கு மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. 24 மணி நேரமும் பிரத்தியேகப் படச் சாதனங்கள் மூலம் அந்த இடங் கள் கண்காணிக்கப்பட்டு வரு கின்றன.
இந்த நிலையில், மதுரையில் அரசு மருத்துவக்கல்லூரி வளா கத்தில் உள்ள அத்தகைய வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறைக்குள் மர்மமான முறையில் பெண் அதிகாரி ஒருவர் உள்ளே நுழைந்து சில மணி நேரம் அங் கேயே இருந்து தேர்தல் தொடர் பான ஆவணங்களை நகல் எடுத்து இருக்கிறார் என்று புகார் கிளம்பி இருக்கிறது.
போராட்டங்களும் வெடித்து இருக்கின்றன.
கடும் பாதுகாப்பு உள்ள வாக் குப்பதிவு இயந்திர அறைக்குள் கலால் வட்டாட்சியர் சம்பூர்ணம் என்ற பெண் அதிகாரி சென்று இருக்கிறார் என்றும் மாவட்ட ஆட்சியரின் அனுமதி இல்லாமல் அவர் உள்ளே சென்றிருக்க முடியாது என்றும் கூறி, மது ரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேற்று சென் னையில் தலைமைத் தேர்தல் அதி காரியிடம் புகார் அளித்தது.
ஆகையால், மதுரை மாவட்ட ஆட்சியரான நடராஜன் என்ற தேர்தல் அதிகாரியை உடனடியாக இடமாற்றம் செய்யவேண்டும் என்றும் அந்தக் கட்சி கோரிக்கை விடுத்தது.
என்றாலும் இது பற்றி கருத்து கூறிய தலைமைத் தேர்தல் அதி காரி சத்ய பிரதா சாஹு, சம்பூர்ணம் என்ற அந்தப் பெண் அதிகாரி உள்ளே சென்றது உண் மைதான் என்றும் ஆனால் அவர் சென்ற அறை வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக் கும் அறைகள் அல்ல என்றும் 'ஸ்டோர் ரூம்' எனப்படும் சாமான் கள் வைக்கும் அறைக்குத்தான் அவர் சென்றார் என்றும் விளக்கம் அளித்தார்.
அந்த அதிகாரியை விசாரித் ததன் மூலம் இது தெரியவந்தது என்றும் இருந்தாலும் சம்பூர்ணம் தற்காலிகமாக பணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார் என்றும் தேர்தல் அதிகாரி குறிப்பிட்டார்.
அரசியல் கட்சிகள் தெரிவித் துள்ள புகார் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் விரிவான தகவல் கிடைத்ததும் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரி உறுதி கூறினார்.
மதுரை மக்களவைத் தொகுதி யில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெங்கடேசன் கேட்டுக்கொண்ட தற்கு இணங்க கண்காணிப்புப் படச்சாதனத்தில் பதிவானவை அவரிடத்திலும் மற்றவர்களிடத் திலும் போட்டுக்காட்டப்பட்டன.
அறையின் உள்ளே சென்ற பெண் அதிகாரியுடன் மூன்று ஆண் அதிகாரிகளும் சென்றதாக வும் அவர்கள் தேர்தல் தொடர்பான ஆவணங்களை 3 மணி நேரம் பார்வையிட்டதாகவும் அந்த ஆவ ணங்களைக் கல்லூரி வளாகத் துக்கு வெளியே எடுத்துச் சென்று நகல் எடுத்ததாகவும் பிறகு வெங்கடேசன் கூறினார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து மதுரையில் அதிகமான போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டு இருக்கிறார்கள். அதிகாரி உள்ளே சென்ற விவகாரம் தங் களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகக் கூறி பல அரசியல் கட்சிகள் புகார் தெரிவித்து இருக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!