ராகுல் காந்தி போட்டியிடும் வயநாட்டில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரசாரம்

திருவனந்தபுரம்: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதி நாடாளுமன்ற உறுப்பி னராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி வகித்து வருகிறார்.
இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிடும் அவர் கேரள மாநில காங்கிரஸ் பிரமுகர்களின் வற்புறுத்தலுக்கிணங்க அங்குள்ள வயநாடு தொகுதியிலும் போட்டி யிடுகிறார்.
வயநாடு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பாரத் தர்ம ஜன சேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி நிறுத்தப் பட்டுள்ளார்.
அங்கு தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. அதற்கு முன்பாக நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட் பாளார் துஷார் வெள்ளப்பள்ளியை ஆதரித்து தற்காப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
சுல்தான் பத்தேரி நகரச் சாலைகளில் வாகனத்தில் சென்று அவர் மக்களிடையே உரையாற்றி வாக்குச் சேகரித்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டமாக நடத்தப்படுகிறது.
முதல் கட்டமாக கடந்த 11ஆம் தேதி 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கும் 18ஆம் தேதி 13 மாநிலங்களில் 96 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், மூன்றாவது கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது.
நாளை 13 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடைபெறுகிறது.
கேரளா (20), குஜராத் (26), கோவா (2), அசாம் (4), பீகார் (5), சத்தீஷ்கார் (7), கர்நாடகம் (14), மராட்டியம் (14), ஒடிசா (6), உத்தரப்பிரதேசம் (10), மேற்கு வங்காளம் (5), காஷ்மீர் (1), திரிபுரா (1) மாநிலங்களிலும் தத்ராநகர் ஹவேலி (1), டாமன் டையூ (1) ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் மொத்தம் 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மூன்றாவது கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முற்றுகையிட்டுத் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள் கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதி களிலும் 227 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
இந்த மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆகிய 3 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதற்கிடையே, ராகுல் காந்தி அமேதியிலும் வயநாட்டிலும் போட்டியிடுவது குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நையாண்டி செய்துள்ளார்.
இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைந்த பின்னர், ராகுல் காந்தி அடுத்த தேர்தலில் அண்டை நாட்டிலிருந்து போட்டியிடுவார் என அவர் தெரிவித்துள்ளார்.
''ஸ்மிரிதி இரானியால் தோற்கடிக்கப்படுவோம் என்ற அச்சத்திலேயே வயநாட்டில் ராகுல் போட்டியிடுகிறார். வயநாட்டில் இடது சாரிகளுக்கு எதிராக போட்டியிடும் அவர், அக்கட்சியினரை விமர்சிக்கப் போவதில்லை எனக் கூறுகிறார். தம்மை எதிர்ப்பவர்களை எதிர்த்துப் பேச தைரியம் இல்லாத ஒரு தலைவர் நாட்டுக்குச் சேவை செய்ய இயலாது'' என்று பியூஷ் கோயல் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!