3ஆம் கட்ட தேர்தல்; இன்று வாக்குப் பதிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதி களுக்கான பொதுத்தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம் உட்பட 2வது கட்ட தேர்தல் முடிந்துவிட்டது.

இந்த நிலையில் 3வது கட்ட மாக 13 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் உட்பட 116 தொகுதி களில் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

அசாம் 4, பிஹார் 5, சட்டீஸ்கர் 7, கோவா 2, குஜராத் 26, காஷ்மீர் 1, கர்நாடகா 14, கேரளா 20, மகா ராஷ்டிரா 14, ஒடிசா 6, உத்தர பிரதேசம் 10, மேற்குவங்கம் 5, தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டாமன் டையுவில் தலா 1 தொகுதி களில் இன்று வாக்குப் பதிவு நடக்கிறது.

கடந்த 18ஆம் தேதி திரிபுரா கிழக்கு தொகுதியில் 2ஆம் கட்டமாக தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சட்ட, ஒழுங்கு பிரச்சினை காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதால் இந்தத் தொகுதியிலும் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

மக்களவை 3ஆம் கட்டத் தேர்தலில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங் கிரஸ் தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சூலே, சமாஜ்வாடி நிறுவனர் முலாயம் சிங், சமாஜ் வாடி மூத்த தலைவர் ஆஸம் கான், பாஜக மூத்த தலைவரும் நடிகையுமான ஜெயப்பிரதா,

மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார், மத்திய அமைச் சர் மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர் அனந்த் குமார் ஹெக்டே, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பி.ஒய். ராகவேந்திரா, கர்நாடக முன்னாள் முதல்வர் பங்காரப் பாவின் மகன் மது பங்காரப்பா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் போட்டியிடுகின்றனர்.

அசாம் மாநிலத்தில் உள்ள காம்ருப் மாவட்டத்தில் விநியோகிப்பு நிலையத்திலிருந்து தேர்தல் அதிகாரி ஒருவர், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை பெற்றுக்கொண்டு வாக்குச்சாவடிக்கு சுமந்து செல்கிறார். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!