பினராயி: இயந்திரக் கோளாறு காரணமாக காத்திருக்க நேர்ந்தது

கண்ணூர்: கேரளா, கர்நாடகா, குஜ ராத், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 116 தொகுதிகளில் நேற்று மூன்றாவது கட்ட நாடாளு மன்றத் தேர்தல் நடைபெற்றது.

நடிகை ஜெயப்பிரதா போட்டி யிடும் உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் தொகுதியிலும் சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவ் போட்டியிடும் மைன்புரி தொகுதி யிலும் நேற்று வாக்குப்பதிவு நடை பெற்றது.

மாலை 5.30 மணி நிலவரப்படி 61.31 விழுக்காடு வாக்குகள் பதி வானதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் கேரளாவின் வயநாடு தொகுதியிலும் அக்கட்சி யின் மூத்த தலைவர் மல்லி கார்ஜுனே கார்கே போட்டியிடும் கர்நாடகாவின் குல்பர்கா தொகுதி யிலும் நேற்று மக்கள் வாக்களித் தனர்.

இதில் கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் வாக்குப்பதிவு இயந் திரத்தில் கோளாறு ஏற்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனால் பல இடங்களில் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது சொந்த ஊரான கண்ணூருக்குக் குடும்பத் தினருடன் வாக்களிக்கச் சென் றார்.

முதல்வர் சென்ற வாக்குச்சாவடி யிலும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு, பின்னர் சரி செய்யப்பட்டது.

இதுகுறித்துக் கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர் களிடம் கூறுகையில், "நான் சென்ற வாக்குச்சாவடியிலும் வாக் குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. அதனால் நான் சற்று நேரம் காத்திருந்து வாக்களித்தேன். அருகில் உள்ள வாக்குச் சாவடியிலும் பக்கத்துப் பஞ்சாயத் தில் உள்ள வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

"மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக இயங்கு கிறதா என்பதை உறுதி செய்ய தேர்தல் அதிகாரிகள் தவறிவிட்ட னர்" என்றார்.

அதேபோல், வயநாட்டில் உள்ள மூப்பநாடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிஎம் எஸ் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 79வது வாக்குச்சாவடியில் வாக் குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு இருப்பதாகப் புகார் கூறியிருக்கும் ஜன சேனா வேட்பாளர் வெள்ளப் பள்ளி அங்கு மறு வாக்குப்பதிவு நடத்தக் கோரி தலைமை தேர்தல் அதிகாரிக்குக் கடிதம் எழுதியுள் ளார்.

இதேபோல், கேரள மாநிலம் கோவளம் அருகே அமைக்கப் பட்டிருந்த 151வது வாக்குச்சாவடி யில், காங்கிரஸ் சின்னத்துக்கு வாக்களித்தால், பாஜகவின் சின்னத்தில் விளக்கு எரிவதாக புகார் எழுந்துள்ளது.
ஆனால், திருவனந்தபுர மாவட்ட ஆட்சியர் வாசுகி இதனை மறுத்துள்ளார்.

"இயந்திர கோளாறு ஏற்பட்டது. அதற்கு பதிலாக உடனடியாக வேறோர் வாக்குப் பதிவு இயந்திரம் வைக்கப்பட்டது," என்றார்.

இதே போல் கோவா, அசாம் மாநிலத்திலும் வாக்கு இயந்திரங் களில் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!