50% வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை எண்ண வலியுறுத்தி மறுசீராய்வு மனு தாக்கல்

புதுடெல்லி: ஒவ்வொரு தொகுதியி லும் 50% வாக்கு ஒப்புகைச் சீட்டு களை எண்ண வேண்டும் என்பதை வலியுறுத்தி 21 எதிர்க்கட்சிகள் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள் ளன. தெலுங்குதேசம் கட்சி தலை வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 21 எதிர்க்கட்சிகள், ஒப்புகைச் சீட்டுகளில் 50 விழுக்காட்டை வாக்கு எண்ணிக்கையின்போது எண்ண வேண்டும் என உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அதை நடைமுறைப்படுத்தினால் தேர்தல் முடிவுகள் வர சுமார் 5 நாட்கள் ஆகும் என தேர்தல் ஆணையம் வாதிட்டது.

ஒவ்வொரு தொகுதியிலும் ஏதாவது ஐந்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந் திரத்தில் பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டு இயந்திரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் எனத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், எதிர்க்கட்சிகளின் மனுவைத் தள் ளுபடி செய்தது. அதனை எதிர்த்து, 21 எதிர்க்கட்சிகளின் சார்பில் மீண்டும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்துத் தொகுதிகளிலும் 50% வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை எண்ண அதில் கோரப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!