மோடி­யின் சொத்து ரூ. 2.51 கோடி

வாரணாசி: வாரணாசி தொகுதி­யில் நேற்று பிரதமர் மோடி வேட்பு மனுத்­ தாக்கல் செய்­தார். அதில் அவருடைய சொத்து விவரங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்­ளன.

அ­தன்படி மோடி­யின் அசை­யும் மற்­றும் அசையா சொத்­துக­ளின் மொத்த மதிப்பு ரூ. 2.51 கோடி.  

கடந்த ஐந்து ஆண்டு­க­ளுக்­கான ஆண்டு வரு­மானத்தை­­யும் அவர் வேட்பு மனு­வில் குறிப்­பிட்டுள்­ளார். 

2018 நிதியாண்­டில் மோடி­யின் ஆண்டு வரு­மானம்  ரூ. 19.92 லட்சம், 2017 நிதியாண்­டில் ஆண்டு வரு­மானம்  ரூ. 14.59 லட்சம், 2016 நிதியாண்­டில் ரூ. 19.23 லட்சம், 2015 நிதியாண்­டில் ரூ. 8.58 லட்சம் மற்­றும் 2014 நிதியாண்­டில் மோடி­யின் ஆண்டு வரு­மானம் ரூ. 9.69 லட்சமாக இருந்­து­ள்­ளது. பிரதமர் பதவிக்காக வழங்கப்­படும் மாத வரு­மானம் மட்டுமே அவருடைய அதிகபட்ச ஊதியமாக இருந்து வருகிறது.  மேலும் தன்னுடைய கையிருப்­பில்  ரூ. 38,750 பண­மும் வங்கி கணக்­கில் ரூ. 4.143 பண­மும் இருப்பதாக மோடி தெரிவித்­துள்­ளார். எஸ்பிஐ வங்கி­யில் மோடி பெய­ரில் உள்ள வைப்பு நிதி­யில் ரூ. 1.27 கோடி பணம் உள்­ளது. தவிர, ஆயுள் காப்பீட்டுத்­ திட்­டத்­தில் அவரிடம் ரூ. 1.90 லட்சம் பணம் உள்­ளது. அவரிடம் சொந்தமாக 45 கிராம் தங்­கம் உள்­ளது. அதன் மதிப்பு  ரூ. 1.13 லட்சம்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon