சுடச் சுடச் செய்திகள்

ஓட்டப்பிடாரத்தில் 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் என அமைச்சர்கள் நம்பிக்கை

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் சட்ட மன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் 

75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத் தில் வெற்றி பெறுவார் என அதிமுக அமைச்சர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் ஓட்டப்பிடா ரத்தில் அதிமுகவின் தேர்தல் அலுவலகத் திறப்பு விழா நடை பெற்றது. இதில் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏழு அமைச்சர்களும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக ஒருமுறை மட்டுமே வெற்றி பெற்றதாகச் சுட்டிக்காட்டினர்.

“அதிமுக பிளவுபட்டிருந்த போது மட்டுமே திமுகவால் இங்கு வெற்றிபெற முடிந்தது.

“இடைத்தேர்தலில் துரோகிகள் ஒருபோதும் வெற்றி பெற முடி யாது. தமிழக உரிமையை முதல் வர் பழனிசாமி ஒருபோதும் விட்டுத்தரமாட்டார்,” என அந்த அமைச்சர்கள் தெரிவித்தனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon