சபாநாயகர் தனபால் நோட்டீசுக்கு உச்ச நீதிமன்றம் தடை 

சென்னை: அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகி யோர் தொடர்ந்த வழக்கின் தொடர்பில், சட்டப்பேரவைத் தலைவர் தனபால் அனுப்பிய நோட்டீசுக்கு  இடைக்காலத் தடைவிதித்து டெல்லி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததால், அதிமுக எம் எல்ஏக்கள் பிரபு, ரத்தின சபா பதி, கலைச்செல்வன் ஆகி யோர் மீது நடவடிக்கை எடுக் கக் கோரி அதிமுக கொறடா, சபாநாயகர் தனபாலிடம் மனு அளித்தார்.

இதைத்தொடர்ந்து எம்எல் ஏக்கள் மூவருக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். 

இதற்கிடையே, சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர் மானம் நிலுவையில் இருப்பதால் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கூறி ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

இவ்வழக்கு நேற்று உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

அதிமுக எம்எல்ஏக்கள் சார்பில் கபில் சிபல் முன்னிலையாகி வாதா டியபோது, “இதே போன்றதொரு வழக்கில் அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் 2016ஆம் ஆண்டு காங்கிரஸ் முதல்வர் நபம் துகி வழக்கில் அவருக்குப் பெரும் பான்மை இல்லை எனக் கூறி ஆட்சி கலைக்கப்பட்டது.

“அதில் சபாநாயகர்மீது நம் பிக்கை இல்லாத் தீர்மானம் அளிக் கப்பட்ட நிலையில் எந்த உத்தரவும் சட்டப்பேரவைத் தலைவர் பிறப்பிக்க முடியாது என உத்தரவிட்டு தீர்ப் பளித்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் மூன்று எம்எல்ஏக்கள் மீது தமிழக சட்டப் பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் திமுக சார்பில் நம் பிக்கை இல்லாத் தீர்மானம் சட் டப்பேரவைத் தலைவர் மீது கொண்டுவரப்பட்டுள்ளது.

“இந்த தீர்மானத்தின் மூலம் சட்டப்பேரவைத்தலைவர் எந்த நட வடிக்கையும் எடுக்கமுடியாது என் கிற அடிப்படையில் அவரது நோட் டீசுக்குத் தடைவிதிக்கவேண்டும்,” எனக் கேட்டுக்கொண்டார்.

சபாநாயகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகில் ரோத்தகி முன்னிலையாகி வாதாடியபோது, “இந்த வழக்கில் உயர் நீதிமன்றத் தில் அவர்கள் முறையிட்டிருக்க வேண்டும், உச்ச நீதிமன்றத்தின் வரையறையில் இந்த வழக்கு வராது. ஆகவே வழக்கை தள்ளு படி செய்யவேண்டும்,” என்றார்.

அவரது வாதத்தை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு நிராகரித்து தடை விதித்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon