50% வாக்குகளை ஒப்புகைச்சீட்டுடன் சரிபார்க்க கோரிக்கை எதிர்க்கட்சிகள் மனு: நீதிமன்றம் நிராகரிப்பு

புதுடெல்லி: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவாகி உள்ள 50 விழுக்காடு வாக்குகளை விவிபாட் இயந்திரத்தில் ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டுச் சரி பார்க்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக 21 எதிர்க்கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடியானது.

காங்கிரஸ், தெலுங்கு தேசம், திமுக உள்ளிட்ட 21 கட்சிகள் மேற்குறிப்பிட்ட கோரிக்கையை தேர்தல் ஆணையத்திடம் வலியு றுத்தி வந்தன. மேலும் உச்ச நீதி மன்றத்தையும் அணுகின.

இது தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த மாதம் 8ஆம் தேதி ஓர் உத்தரவைப் பிறப்பித்தது.

"ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்கு களை விவிபாட் இயந்திரத்தின் ஒப்புகைச்சீட்டுடன் சரிபார்க்கப் படும் என்று இருந்த நடைமுறை மாற்றப்படுகிறது.

"மாறாக ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் 5 மின் னணு வாக்குப்பதிவு இயந்திரங்க ளில் பதிவாகும் வாக்குகளை ஒப்புகைச்சீட்டுகளுடன் சரிபார்க்க வேண்டும்," என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து எதிர்க்கட்சிகள் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தன.

அதில், ஒவ்வொரு தொகுதியி லும் குறைந்தது 50 விழுக்காடு வாக்குச் சாவடிகளில் பதிவாகும் வாக்குகளை ஒப்புகைச் சீட்டுக ளுடன் சரிபாக்க வேண்டும் என் றும் இதுதான் தேர்தல் நடை முறைகள் மீது மக்களுக்கு நம் பிக்கையை ஏற்படுத்தும் என்றும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந் தது. இம்மனு மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடை பெற்றது.

இதையடுத்து பிறப்பித்த உத்தரவில், தேர்தலில் பதிவான வாக்குகளை விவிபாட் இயந்திரத் தின் ஒப்புகைச்சீட்டுகளுடன் சரி பார்ப்பதை 5 விழுக்காடாக உயர்த்தப் போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

"எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமானால் செய்யலாம். ஆனால் 50 விழுக்காடு என்பதை ஏற்க இயலாது. இது வாக்கு எண்ணிக்கையில் தாமதத்தை ஏற்படுத்தும்," என்று குறிப்பிட்ட நீதிபதிகள், எதிர்க்கட்சிகளின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதனால் எதிர்க்கட்சிகள் ஏமாற்றம் அடைந்துள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!