சுடச் சுடச் செய்திகள்

இடைத்தேர்தல்: களமிறங்கும் 200 திமுக வழக்கறிஞர்கள் 

சென்னை: தமிழ்நாட்டில் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ள நான்கு தொகுதி களிலும் போட்டியிடும் முக்கிய எதிர்க்கட்சியான திமுக, ஒவ் வொரு தொகுதிக்கும் குறைந்த பட்சம் 50 வழக்கறிஞர்களைக் களமிறக்கி இருக்கிறது. 

பிரசாரத்தின்போதும் வாக் களிக்கும்போதும் ஏற்படக்கூடிய நடைமுறைச் சிரமங்களையும் தடைகளையும் களைய அந்த வழக்கறிஞர்கள் உதவுவார்கள் என்று கட்சி தெரிவித்துள்ளது. 

தேர்தல் நடைமுறையின்போது தேர்தல் அதிகாரிகள், இதர பொறுப்பாளர்கள் எதிர்பாராத வித மாக பல தடைகளை ஏற்படுத்தக் கூடும். அத்தகைய தடைகளை அரசியல் கட்சித் தொண்டர்கள் எதிர்கொள்வது வழக்கமான ஒன்றுதான். 

இந்த நிலையில், அத்தகைய பிரச்சினைகளைச் சமாளிக்கும் விதமாக 200 வழக்கறிஞர்களை நான்கு தொகுதிகளிலும் திமுக பிரித்துவிட்டு இருக்கிறது. 

கட்சிக்கு ஏற்படக்கூடிய பிரச் சினைகளை அந்த வழக்கறிஞர்கள்  உடனுக்குடன் தீர்ப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

திருப்பரங்குன்றம் தொகுதியில் செயல்படும் வழக்கறிஞர்கள் அணியில் இடம்பெற்று இருக்கும் ஏ. பழனிசாமி என்பவர் இது பற்றி கருத்து கூறினார்.  

“தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் ஒரு மனுவைத் தாக்கல் செய்து இருக்கிறோம். வாக்காளர் கள் அனைவருக்கும் வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கப்படு வதைத் தேர்தல் ஆணையம் உறு திப்படுத்தவேண்டும் என்று நாங் கள் வலியுறுத்தி உள்ளோம்,”  என்று அவர் கூறியதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித் தாள் தெரிவித்தது. 

தேர்தல் தொடர்பான இதர புகார்களையும் தாங்கள் தாக்கல் செய்து இருப்பதாகவும் அந்த வழக்கறிஞர் குறிப்பிட்டார்.  

அரவக்குறிச்சி தொகுதியில் திமுகவுக்காகச் செயல்படும் வேறு ஒரு வழக்கறிஞரான ஜி. தேவ ராஜன் என்பவர், இந்தத் தொகுதி யில் சில இடங்களில் பிரசாரம் செய்ய தங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றார். 

உடனடியாக தாங்கள் செயலில் இறங்கி அனுமதி பெற்றதாகவும் தேவராஜன் கூறினார்.  

ஓட்டப்பிடாரம், சூலூர், அரவக் குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு தொகுதிகளிலும் சட்ட பூர்வ முறையில் எப்படியும் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்பதே திமுகவின் இலக்கு என்று வழக் கறிஞர்கள் தெரிவித்து உள்ளனர்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon