வதேராவை மறைமுகமாக தாக்கி பேசிய மோடி

பதேஹாபாத்: விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு விளைநிலங்களை வாங்கியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று பிரதமர் மோடி தெரிவித் துள்ளார்.

ஹரியானா மாநிலம் பதேஹா பாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், நாட்டைக் கொள்ளையடித்தவர்கள் தாங்கள் கொள்ளையடித்தவற்றை திருப்பித்தர வேண்டியது அவசியம் என்றார்.

“மத்தியிலும் ஹரியானாவிலும் எப்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும், விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு நிலங்களை வாங்குவது வழக்கமா கிவிட்டது. உங்களது ஆதரவால் விவசாயிகளிடம் கொள்ளையடித்த வர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி உள்ளேன். அவர்கள் பிணை வாங்குவதில் முனைப்பாக உள்ள னர்,” என்றார் மோடி.

தங்களை மன்னர்கள் போல் கருதிக்கொள்ளும் சிலர், யாரும் தங்களைத் தொட முடியாது என நினைத்துக் கொண்டிருப்பதாக குறிப்பட்ட அவர், தற்போது அத்த கையவர்களுக்கு பதற்றம் ஏற்பட் டுள்ளது என்றார்.

பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, நிலபேரம் சம்பந்த மாக ஒரு வழக்கை எதிர்கொண் டுள்ளார். இந்நிலையில் அவரை மறைமுகமாகத் தாக்கியே பிரதமர் மோடி இவ்வாறு பேசியதாகக் கூறப்படுகிறது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon