இரட்டை குடியுரிமை விவகாரத்தில் ராகுலுக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

புதுடெல்லி: நகரின் மையப் பகுதி ராகுல் காந்தி இரட்டைக் குடி யுரிமை பெற்றதாக புகார் எழு ந்துள்ளது. இந்நிலையில் அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரி உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடியானது.

ராகுலுக்கு தடை விதிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கும் மத் திய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுத் தாக்கல் செய்திருந்த டெல்லியைச் சேர்ந்த ஜெயபகவான் கோயல், சந்தர் பிரகாஷ் தியாகி ஆகிய இருவரும் வலியுறுத்தி இருந்தனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமையை தாமாக முன்வந்து பெற்றுள்ளார். கடந்த 2005-06ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள பேக்காப்ஸ் நிறுவனத்தில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்த போது, தாம் இங்கிலாந்து குடியுரிமையைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக விளக்கம் கேட்டு ராகுலுக்கு அண்மையில் மத்திய உள்துறை அமைச்சு நோட்டீஸ் அனுப்பியது என்று மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் மத்திய அரசின் நட வடிக்கையில் தங்களுக்கு திருப்தி இல்லை என்று குறிப்பிட்டுள்ள இருவரும், ராகுல் காந்தி தாமாக முன்வந்து இங்கிலாந்து குடியு ரிமைப் பெற்றதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார் என இருவரும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

"எனவே ராகுல் ஒரே சமயத்தில் இரு குடியுரிமையை வைத்திருக்க முடியுமா என்பதை மத்திய அரசு முடிவு செய்ய நீதிமன்றம் உத்தர விட வேண்டும்.

"மேலும் ராகுல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க இயலுமா என்பதையும் நீதிமன்றமே முடிவு செய்ய வேண்டும்," என மனுதாரர்கள் மேலும் குறிப்பிட் டிருந்தனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோக் காய் தலைமையிலான அமர்வு இம்மனுவை நேற்று விசாரித்தது. இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இங்கிலாந்தில் உள்ள ஏதோ ஒரு நிறுவனம், ராகுல் காந்தி குறித்து தெரிவித்ததை வைத்துக் கொண்டு நீதிமன்றம் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று குறிப்பிட்டனர்.

மேலும் மனுதாரர்கள் வேறு எந்தவித ஆதாரங்களையும் அளிக்காத நிலையில், இந்த விவகாரத்தில் முடிவெடுக்க இய லாது என நீதிபதிகள் தெரிவித் தனர். இதையடுத்து ராகுலுக்கு எதிரான மனு தள்ளுபடி ஆனது.

இரட்டைக் குடியுரிமை பெற வில்லை என்கிறார் ராகுல்.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!