வெற்றி சுலபம் என்கிறார் விஜேந்தர் சிங்

புதுடெல்லி: விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று நாட்டுக்கு பதக்கங்கள் பெற்றுத் தந்தது போல் தேர்தலிலும் தம்மால் வெற்றி காண முடியும் என தெற்கு டெல்லி மக்க ளவைத் தொகுதியில் போட்டி யிடும் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார். 

நேற்று முன்தினம் செய்தியா ளர்களிடம் பேசிய அவர், விருப்பு அரசியலில் தமக்கு அறவே விருப்பம் இல்லை என்றார்.

பிரித்தாள வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வரவில்லை. மாறாக அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

தாம் போட்டியிடும் தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்சினைகளைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த விஜேந்தர், பெண்களின் பாதுகாப்புக்குத் தான், தாம் முன்னுரிமை அளிக்க இருப்பதாக தெரிவித்தார்.

33 வயதான விஜேந்தரை எதிர்த்து பாஜக சார்பில் ரமேஷ் பிதூரி களமிறக்கப்பட்டுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon