சுடச் சுடச் செய்திகள்

திமுக இப்போது அகதிகள் முகாம் என தினகரன் கிண்டல்

சென்னை: தமிழகத்தில் தண்ணீர்ப் பஞ்சம் இருப்பதுபோல் திமுகவில் வேட்பாளர் பஞ்சம் இருக்கிறது என அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். 

அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்ட அவர், அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்தால் இப்போதுள்ள அமைச்சர்களில் பாதிப் பேர் பாஜகவுக்குத் தாவிவிடு வார்கள் என்று குறிப்பிட்டார். 

நடப்பு நாடாளுமன்றத் தேர்த லில் பிரதமர் மோடியை வீட்டுக்கு வழியனுப்பி வைக்க வாக்களித்த மக்கள் முதல்வர் பழனிசாமியையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்திய அவர், மோடி யின் ஆட்சியில் நாடு முழுவதும் தொழில்கள் முடங்கி விட்டன என்றார்.

“எனக்குப் பதவி ஆசை இருந் திருந்தால் என் சித்தி சசிகலா விடம் சொல்லி நானேகூட முதல் வர் ஆகியிருப்பேன். கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதால் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினோம். ஆனால் அவரோ துரோகம் செய்துள்ளார். 

“அரசியலில் ராஜதந்திரம் என்ற பெயரில் துரோகம் செய்த  வர்களை விட்டுவிடக்கூடாது.  அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்ததும் கைகளில் கயிறு கட்டி இருக்கும் அமைச்சர்கள் பாஜக வுக்குச் சென்றுவிடுவார்கள். மற்ற     வர்கள் தங்களுடைய தொழிலைப் பார்க்கப் போய்விடுவார்கள்,” என்றார் தினகரன். 

தங்களுடைய சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்க முடியா மல் மு.க. ஸ்டாலினும் திமுகவின ரும் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிவிசாரணை தேவை என்று கேட்பதாகக் குறிப்பிட்ட அவர், ஜெயலலிதாவைக் கொன்றுவிட் டதாகத்  தங்கள் மீது திமுகவினர் உண்மைக்குப் புறம்பாகக் குற்றம் சாட்டுவதாகச் சாடினார். 

ஜெயலலிதாவை வெளிநாடுக ளுக்கு அழைத்துச் செல்ல முடி யாத அளவுக்கு அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்த தினகரன், ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசா ரணை கேட்ட  பன்னீர்செல்வம் உண்மையைச் சொல்ல நேரிடும் எனப் பயந்து விசாரணை ஆணை யத்தின் முன்பு முன்னிலையா வதைத் தவிர்ப்பதாகக் கூறினார்.

“திமுக இப்போது அகதிகள் முகாம்போல் ஆகிவிட்டது. இளை ஞர் பட்டாளம் இல்லை. வயது முதிர்ந்தவர்களின் இயக்கமாக திமுக மாறிவிட்டது,” என்றார் தினகரன்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon