மேற்கு வங்காள வாக்குப் பதிவில் கடும் பதற்றம்

இந்திய மக்களவைக்கு நேற்று நடைபெற்ற ஆறாம் கட்டத் தேர்தலில் மேற்கு வங்காள மாநிலத்தில் வன் செயல் சம்பவங்கள் நிகழ்ந்தன.

குறிப்பாக எட்டு மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்ற மேற்கு வங்காளத்தில் அடிதடி, வேட்பாளர் மீது தாக்குதல், துப்பாக்கிக்சூடு என சட்டவிரோதச் செயல்கள் நிகழ்ந்தன.

வாக்குப் பதிவு நேற்றுக் காலை தொடங்குவதற்கு முன்னர் மேற்கு வங்கத்தின் கோண்டாய் மக் களவைத் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் மாண்டு கிடந்தார். அவரது பெயர் சுதாகர் மைத்தி என்று போலிசார் தெரிவித்தனர்.

அதேபோல நேற்று அதிகாலை ஜர்கிராம் பகுதியில் பாஜக தொண்டர் ஒருவரின் சடலத்தை கிராமவாசிகள் மீட்டனர். அவரது பெயர் ராமன் சிங் என்று அடையாளம் காணப்பட்டது. உடற்கூறாய்வுக்காக அவரது சடலம் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டு தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவுக்கு முந்திய நாளான சனிக்கிழமை இரவு நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களில் இவ்விரு கட்சித் தொண்டர்களும் கொல்லப் பட்டிருக்கலாம் என போலிசார் சந்தேகிக்கின்றனர்.

அதேபோல கிழக்கு மித்னாபூர் பகுதியில் உள்ள பகவான்பூர் என்னு மிடத்தில் இரண்டு பாஜக தொண் டர்கள் நேற்று முன்தினம் இரவு சுடப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி தெரி வித்தது. துப்பாக்கிக்குண்டு காயங் களுடன் உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவ்விரு வருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

மேற்கு வங்காளத்தின் கட்டல் தொகுதியில் பாஜக வேட்பாளராக பாரதி கோஷ் போட்டியிடுகிறார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இவர் ஒரு காலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக இருந்தவர். நேற்றுக் காலை இவர் தமது தேர்தல் முக வர்களுடன் வாக்கு மையம் ஒன் றிற்குச் சென்றபோது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பெண் தொண் டர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

எனவே அந்த இடத்தைத் தவிர்த்துவிட்டு மற்றொரு வாக்கு மையத்திற்குள் நுழைய முயன்ற பாரதி கோஷ் மீண்டும் எதிர்ப்புக்கு ஆளானார். எதிர்பார்க்காத வகை யில் அவர் அடித்து கீழே தள்ளப் பட்டார். இதனால் பாரதி கோஷ் கண்ணீர்விட்டு அழுதவாறே அந்தப் பகுதியைவிட்டுச் சென்றார்.

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியி னரிடையே ஏற்கெனவே நடை பெற்ற வாக்குப் பதிவின் போதும் அடிதடி சம்பவங்கள் நிகழ்ந்தன.

மம்தா பானர்ஜியின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மாநிலத்தில் கணிசமான வெற் றியைப் பதிக்க பாஜக கடுமை யான முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது. ஆனால் அதற்கு இடம் தராமல் இயன்ற வரை அந்தக் கட்சியினருக்கு மாநில அரசாங்கம் முட்டுக் கட்டை போட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பீகாரில் தேர்தல் பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்த ஊர்க்காவல் படை வீரர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக சுட்டதில் தேர்தல் அதிகாரி ஒருவர் மாண்டார். சிவேந்திர குமார் என்னும் அந்த அதிகாரி நேற்றுக் காலை வாக்குப் பதிவு ஏற்பாடுகளைத் தொடங்கிய வேளையில் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டது. படை வீரர் கைது செய்யப்ட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!