தமிழகத்தில் ஆகஸ்ட் வரை தேர்தல் பரபரப்பு நீடிக்கும்

மக்களவைத் தேர்தல் ஓய்ந்த பின்னர்கூட தமிழகத்தில் மட்டும் பரபரப்பு அடங்கப்போவதில்லை. காரணம் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலும் தேர்தல்கள் வரிசை பிடித்துக் காத்திருக்கின்றன.

பெருமளவில் கள்ளப் பணம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் அந்த மாதங்களில் நடத்தப் படலாம்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்த்குமார் வெற்றிபெற்றால் அவர் தமது சட்டமன்ற உறுப்பினர் பதவியைக் கைவிட வேண்டி இருக்கும். அவ்வாறு செய்தால் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி காலியாகிவிடும்.

ஏற்கெனவே, தினகரனுக்கு அதர வாகச் செயல்படும் சந்தேகத்தில் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய அதிமுக எம்எல்ஏக் களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இருப் பினும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தடை விதித் துள்ளது.

தடை நீக்கப்பட்டு அம்மூவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அறந் தாங்கி. விருத்தாச்சலம், கள்ளக் குறிச்சி சட்டமன்றத் தொகுதிகள் காலியானவையாக அறிவிக்கப் படும்.

எனவே, ஒரு மக்களவைத் தொகுதிக்கும் நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அடுத்த ஓரிரு மாதங்களில் தேர்தல் நடத்தப்பட லாம். அத்துடன், தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர் களின் பதவி ஜூலையில் முடிவுக்கு வரு வதால் சட்டமன்ற உறுப்பினர் கள் வாக்களிக்கும் தேர்தலும் அடுத்து வரவிருக்கிறது.

அதிமுகவின் அர்ஜுனன், லட்சு மணன், மைத்ரேயன், ரத்தினவேல், திமுகவின் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜா ஆகி யோரின் மாநிலங்களவை உறுப் பினர் பதவி ஜூலை 24ல் நிறைவு பெறுகிறது.

ஆகையால் அதற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தொடங்கிவிட் டது. ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் நிலை உள்ளது.

எனவே தமிழகத்தில் தேர்தல் முழக்கம் இன்னும் ஓரிரு மாதங் களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

இடையில் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகளை அரசியல் கட்சிகள் அரங்கேற்றும் வாய்ப்பு உள்ளதாக வும் ஊடகங்கள் கூறுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!