ஸ்டாலின்- ராவ் சந்தித்தனர்

சென்னை: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், நேற்று சென் னையில் திமுக தலைவர் ஸ்டா லினை, அவருடைய ஆழ்வார் பேட்டை வீட்டில் சந்தித்து நடப்பு அரசியல் விவகாரங்களைப் பற்றி விவாதித்ததாகத் தெரிகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் இன் னமும் முடிவடையாத நிலையில், இம்மாதம் 21ஆம் தேதி நடக்க விருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில் இந்த சென்னை சந்திப்பு இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

இந்தியாவில் பாஜக சாராத, காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கத் துடன் முயற்சிகளை முடுக்கிவிட்டு இருக்கும் சந்திரசேகர ராவ் திரு வனந்தபுரத்தில் எற்கெனவே கேரள முதல்வரை சந்தித்துள்ளார்.

இதற்கு முன் ஸ்டாலினைச் சந்திப்பதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் ராகுல் காந்தி தான் பிரதமராக வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பகிரங் கமாக யோசனை தெரிவித்து இருக்கிறார்.

தெலுங்கானா முதல்வரை பணிவன்பு நிமித்தம் சந்திப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று நேற்று திமுக தரப்பினர் தெரி வித்தனர்.

சந்திரசேகர ராவும் ஸ்டாலினும் சென்னையில் சென்ற ஆண்டு சந்தித்தனர். மாநில சுயாட்சி, நிதித்துறை அம்சங்கள், அரசியல் சூழ்நிலைகள் பலவற்றையும் பற்றி அப்போது அவர்கள் கலந்து பேசி னார்கள்.

இப்போது நடக்கும் நாடாளு மன்றத் தேர்தலில் ஆட்சி அமைக் கும் அளவுக்கு பாஜக கூட்ட ணியோ காங்கிரஸ் கூட்டணியோ வெற்றி பெறாது என்று சந்திரசேகர ராவ் நம்புகிறார்.

ஆகையால் வட்டார கட்சிகள் சேர்ந்து மத்தியில் ஆட்சி அமைக்க உகந்த காலம் கனியப்போகிறது என்று திரு ராவ் கணித்துள்ளார்.

இத்தகைய ஓர் ஆட்சி அமைய வேண்டுமானால் ஸ்டாலின் போன்ற மாநிலத் தலைவர்களின் ஆதரவு மிக முக்கியம் என்று அவர் நம்புகிறார்.

கர்நாடகாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் குமாரசாமி, மேற்கு வங்காளத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவி மம்தா பானர்ஜி போன்ற தலைவர்களும் இந்த முயற்சியில் தனக்கு உறு துணையாக இருப்பார்கள் என்றும் திரு ராவ் எதிர்பார்க்கிறார்.

இச்சூழ்நிலையில் ஸ்டாலின்- ராவ் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தேர்தலுக்குப் பிறகு அமையக் கூடிய கூட்டணிகளுக்கான வாய்ப் புகள் குறித்து நேற்று ஸ்டாலினும் ராவும் பேச்சு நடத்தி இருக்கக் கூடும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்துவிடும்படி சந்திரசேகர ராவை ஸ்டாலின் கேட்டுக்கொள்வார் என்றும் காங்கிரஸ், பாஜக இரண்டும் இல்லாத கூட்டணியை அமைக்க கைகொடுக்கும்படி ஸ்டாலினை ராவ் கேட்டுக்கொள்வார் என்றும் சந்திப்புக்கு முன்னதாக தகவல்கள் கூறின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!