வாக்குப்பதிவை கவனித்த பத்து நாட்டுப் பிரதிநிதிகள்

புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவை பத்து நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பார்வையிட் டனர். வாக்குப்பதிவும் தேர்தல் நடைமுறைகளும் தங்களை வெகு வாக ஆச்சரியப்பட வைத்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆறாவது கட்ட வாக்குப்பதிவு கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது. டெல்லியில் உள்ள தொகுதிக ளுக்கு ஒரே நாளில் வாக்குப்பதிவு நடந்தது.

இந்நிலையில் ரஷ்யா, மியன் மார், பூடான், கம்போடியா, போஸ் னியா, வங்காள தேசம், கென்யா, மெக்சிகோ, மலேசியா, இலங்கை ஆகிய பத்து நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் டெல்லியில் நடை பெற்ற வாக்குப்பதிவை நேரில் பார்வையிட்டனர். மொத்தம் 12 வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று வாக்குப்பதிவை கவனித்த னர்.

இதன் பின்னர் செய்தியாளர்களி டம் பேசிய ரஷ்ய தேர்தல் ஆணை யர் உறுப்பினர் செவ்செங்கோ, "வாக்குப்பதிவு இயந்திரங்கள் இயங்குவதை கவனிப்பது சுவார சியமான அனுபவமாக இருந்தது. ரஷ்யாவிலும் இது போன்ற வாக் குப்பதிவு இயந்திரங்களே பயன் படுத்தப்படுகின்றன," என்றார்.

இதற்கிடையே டெல்லியில் நடைபெற்ற தேர்தலில் 111 வயதான முதியவர் வாக்களித்தார். பச்சன் சிங் என்ற ஆடவர், கடந்த 1951ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் வாக்களித்து வருகிறார்.

கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது மிதிவண்டியில் வந்து வாக்களித்துச் சென்றார்.

இம்முறை வயோதிகம் காரணமாக காரில் வந்த பச்சன் சிங், பின்னர் சக்கர நாற்காலியின் உதவியோடு வாக்குச்சாவடிக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.

அவருடன் துணைக்கு வந்திருந்த 63 வயதான அவரது இளைய மகன் ஜஸ்பீர் சிங்கும் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.

இதற்கிடையே தேர்தல் அலுவ லர்களுக்கு தங்குமிடம், உணவு உள்ளிட்ட எந்த வசதியும் செய்து தரப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!