‘வளம் சேர்க்க பதவியை பயன்படுத்தியது இல்லை’

லக்னோ: சொந்த நலனுக்காக ஒருபோதும் தமது பதவியை பயன் படுத்தியதில்லை எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் நடை பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத் தில் கலந்துகொண்டு பேசிய அவர், எதிர்க்கட்சித் தலைவர்கள் பதவி யில் இருந்தபோது தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏரா ளமான சொத்துக்களைக் குவித்த னர் என்று குற்றம் சாட்டினார்.

"எனக்கு ஒரு சாதிதான் உள்ளது. அது ஏழ்மை சாதி. நான் வறுமையான சூழலில் வாழ்ந்து இந்த இடத்தை அடைந்திருக்கி றேன். வறுமைதான் எனக்கு உத் வேகத்தை அளித்தது," என்றார் பிரதமர் மோடி.

எதிர்க்கட்சியினர் சாதி என்ற பெயரில் சமுதாயத்தில் பிரிவை ஏற்படுத்த முயற்சி செய்வதாகச் சாடிய அவர், தமது குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ, உறவினர்களோ அரசியலில் இல்லை என்றார்.

ஆனால் எதிர்க்கட்சியினர் அதிகாரத்தைப் பயன்படுத்தி தாங்கள் மட்டுமல்லாமல் உறவினர் களும் சொத்துக்களைக் குவிக்க அனுமதித்தனர் என்றும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

"நாட்டின் வளத்திலோ ஏழைக ளுக்கு உரிமையுள்ள பணத்திலோ நான் தப்பித்தவறி கூட கைவைத் தது இல்லை. வேறு யாரையும் அவ்வாறு செய்ய அனுமதித்ததும் இல்லை.

"நான் பதவிக்கு வந்த போதெல் லாம் ஏழைகளுக்கு இலவச எரி வாயு, மின் இணைப்பு, கழிவறை, வங்கிக் கணக்கு, காப்பீட்டுத் திட்டங்கள் ஆகியவற்றை அளித்து சேவை ஆற்றினேன்.

"ஆனால் இந்த ஏழைகள் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பளித்த போதெல்லாம் ஏமாற்றப்பட்டனர், கொள்ளையடிக்கப்பட்டனர்," என் றார் பிரதமர் மோடி.

"மாயாவதியும் அகிலேஷ் யாதவும் உத்தரப்பிரதேச மாநில முதல்வராக இருந்த காலத்தை விட நான் வளமான ஒரு மாநிலத்தின் முதல்வராக அதிக காலம் பணியாற்றி உள்ளேன்," என்று குறிப்பிட்ட மோடி, எதிர்க் கட்சியினர் தற்போது இதயமற்ற, மூர்க்கத்தனமானவர்களாக மாறி விட்டனர் என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!