தமிழிசை சௌந்தரராஜன்: பாஜகவுடன் பேசி வருகிறது திமுக

சென்னை: ஓட்டப்பிடாரத்தில் உணவுத்துறை அமைச்சர் காம ராஜூடன் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாஜகவுடன் பேசி வருகிறார் என்றார்.

இந்நிலையில், “பாஜகவுடன் நான் பேசி வருவதாக நிரூபித்தால் அரசியலை விட்டே நான் விலகத் தயார். 

“மோடியுடன் நான் பேசியதாக பச்சைப் பொய் கூறிய தமிழிசைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் பிறந்த தமிழிசை இந்தளவு தரம் தாழ்ந்தது வேதனை அளிக்கிறது. ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதில் இரட்டிப்பு ஆர்வத்தில் உள்ளேன்,” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.