இருதரப்பு மக்கள் மோதல்; பதற்றம்

திருச்சி: திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. 

திருச்சி தொட்டியத்தில், தோளூர்பட்டி மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் சேர்ந்த உண்டியல் பணத்தை எடுத்துச் செல்லும்படி ஒரு தரப்பினரும், எடுத்துச் செல்லக் கூடாது என்று மறு தரப்பினரும் மோதிக் கொண்டதால் அங்கு பதற்றம் நிலவியது.

இந்நிலையில் தோளூர்பட்டியில் ஒரு சமூகத்தினரின் வீடுகளின் மேற்கூரைகள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் உடைத்து நொறுக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இமாசலப் பிரதேசத்தில் உள்ள மணாலி மக்களவைத் தொகுதிக்குட் பட்ட 8வது வாக்குச் சாவடியில் மணக்கோலத்துடன் மாப்பிள்ளை ஒருவர் வாக்களித்தார். அப்போது அவர் ரூபாய் நோட்டுகளால் தயாரிக்கப்பட்ட பண மாலை அணிந்திருந்தார். வித்தியாசமான தோற்றத்தில் தமது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்த அவரை அங்கிருந்த வாக்காளர்களும் அதிகாரிகளும் வியப்புடன் பார்த்தனர். படம்: இந்திய ஊடகம்

20 May 2019

மோடியின் யாத்திரை குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார்