சுடச் சுடச் செய்திகள்

உண்மையான பிரதமர் மட்டுமே மக்களின் தற்போதைய தேவை என்கிறார் மாயாவதி

சென்னை: மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்ற பிரதமர் மோடியும் மத்திய அரசும் தவறிவிட்டதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதி குற்றம்சாட்டி உள்ளார். இதனால் பிரதமர் மீது மக்கள் பெருங் கோபத்தில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

பிரதமர் மோடிக்கும் மாயா வதிக்கும் இடையேயான வார்த் தைப்போர் நாளுக்கு நாள் தீவிர மடைந்து வருகிறது. அண்மையில் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோடி, தலித் மக்களுக்காக மாயாவதி நீலிக்கண்ணீர் வடிப்பதாக விமர்சித்திருந்தார்.

இதையடுத்து மோடி தன் மனைவியைப் பிரிந்து வாழ்வது குறித்து மாயாவதி விமர்சித்தார். இதற்கு பாஜக தரப்பில் பதிலடி கொடுத்த அருண்ஜெட்லி, மாயா வதி பொது வாழ்க்கைக்குத் தகுதி இல்லாதவர் என்றார்.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த மாயாவதி, டுவிட்டர் பதிவு ஒன்றில் மீண்டும் மோடியை யும் பாஜகவையும் சீண்டும் வகையில் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் அரசு மூழ்கும் கப்பல் என்று விமர்சித் துள்ள அவர், ஆர்எஸ்எஸ் அமைப்பும் மோடி அரசைக் கைவிட்டு விட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

“பாஜகவுக்கு ஆதரவாக தொண்டர்கள் எந்தவிதத்திலும் பிரசாரம் செய்யவில்லை. இத னால் பிரதமர் மோடி நடுக்கத்தி லும் கலக்கத்திலும் உள்ளார்.

“அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில்தான் ஒரு சுத்த மான பிரதமர் நாட்டை வழிநடத்த முடியும். மக்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் பல தலைவர்கள் தலைமை சேவகர்கள் என்றும் தேநீர் விற்பனையாளர்கள் என்றும் காவல்காரர்கள் என்றும் பேசி வருகிறார்கள்.

“எங்களது இப்போதைய தேவை உண்மையான பிரதமர் மட்டுமே,” என்று மாயாவதி தமது பதிவில் தெரிவித்துள்ளார்.

பொய்கள் மூலம் மக்களை மகிழ்ச்சிப்படுத்தியது போதும் என்றும் மக்களை ஏமாற்ற முடி யாது என்றும் மாயாவதி தமது பதிவில் மேலும் காட்டத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon