கமல் வீடு, அலுவலகத்துக்கு பலத்த போலிஸ் பாதுகாப்பு

சென்னை: சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி நாதுராம் கோட்சே எனும் ஒரு இந்துதான்; நான் காந்தியின் மானசீக கொள் ளுப்பேரன். அந்தக் கொலைக்குக் கேள்வி கேட்க வந்துள்ளேன் என கமல்ஹாசன் குறிப்பிட்டு பேசி யதற்கு எதிர்ப்பு வலுத்து வருவ தால் அவரது வீடு, அலுவலகத் துக்குப் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி தேர்தல் பிர சாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து இக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு பல கட்சித் தலைவர்களும் தங் களது கண்டனங்களையும் ஆதர வையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கமல்ஹாசனின் வீட்டை இந்து அமைப்புகள் முற் றுகையிடலாம், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள கமலின் வீடு, அலுவலகத்துக்குப் போலிஸ் பாது காப்பு போடப்பட்டுள்ளது.

"கமலின் கொழுப்பேறிய நாக்கை அறுக்கவேண்டும். அவ ருக்குத் தற்போது நாக்கில் சனி. பயங்கரவாதத்திற்கு மதம் கிடை யாது. கமல் கட்சியைத் தடை செய்யவேண்டும். அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்று பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

இந்நிலையில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் ஒரு அமைச் சர் இவ்வாறு பேசியது சரியா எனக் கேள்வி எழுப்பியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி, அவரைப் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று கோரியுள்ளது.

தமிழக பாஜக தலைவர் தமி ழிசை கூறுகையில், "வாழ்க்கை யில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித் தவர் காந்தி. எந்த ஒழுக்கத்தை யும் கடைப்பிடிக்காத கமல், தான் காந்தியின் கொள்ளுப்பேரன் என்று சொல்வதற்கு எந்தத் தகுதி யும் இல்லாதவர். அவர்மீது தேர் தல் ஆணையமும் காவல்துறை யும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

"முஸ்லிம் மதத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இருப்பதுபோல இந்து மதத்தில் இருக்கும் அமைப்புதான் ஆர்எஸ்எஸ். மாற்று கருத்துக் கொண்டோரை அழிக்கும் சிந் தனை கொண்ட அமைப்பு அது. எனவே, கமல் கூறியதை 100% அல்ல; 1,000% வரவேற்கிறேன்," என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!