கலவரம், வாகனங்கள் எரிப்பு; பாதுகாப்புடன் வெளியேறிய அமித் ஷா

பாஜக தொண்டர்களுக்கும் திரிணாமூல் காங்கிரஸ், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் மாணவ அமைப்பின ருக்கும் இடையே ஏற்பட்ட கலவரம் காரணமாக நேற்றும் அதற்கு முந்தைய நாளும் மேற்கு வங்கத்தில் பதற்றம் நிலவியது.

நேற்று முன்தினம் நடைபெற்ற அந்தக் கலவரத்தில் ஈடுபட்டதாக 59 பேர் கைது செய்யப்பட்டனர். கலவரம் காரணமாக பாஜக தலை வர் தேர்தல் பிரசாரத்தைத் தொடர முடியாமல் ஆயுதம் தாங்கிய வீரர் களின் உதவியுடன் அங்கிருந்து வெளியேற நேரிட்டதாக போலிசார் தெரிவித்தனர்.

பலர் காயமடைந்ததாகவும் அவர்களில் பெரும்பாலானோர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட் டது.

கலவரத்தின்போது மேற்கு வங்கத்தில் பெரிதும் போற்றப்படும் தத்துவ மேதை ஈஷ்வர் சந்திர வித்யாசாகரின் 200 ஆண்டுகள் பழமையான சிலை உடைக்கப் பட்டது.

அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக கோல்கத்தா உட்பட மேற்கு வங்கத்தின் பல பகுதி களில் திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம், கண்டன ஊர்வலம் நடத்தினர். பாஜக சார்பில் புது டெல்லியில் அமைதிப் போராட்டமும் நடைபெற்றது.

இந்தியாவில் ஏழாவது கட்டமாக, வரும் 19ஆம் தேதி நடைபெறும் வாக்குப் பதிவில் மேற்கு வங்காளத்தின் ஒன்பது தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பிரசாரத்தில் பாஜக தலைவர் அமித் ஷா நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தார்.

அமித் ஷாவுடன் பாஜக தொண்டர்கள் பங்கேற்ற பேரணி கோல்கத்தா பல்கலைக்கழக வளாகத்துக்கு அருகே சென்ற போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் மாணவர் அமைப்பைச் சேர்ந்த வர்கள் கறுப்புக் கொடி காட்டிய துடன் 'அமித் ஷா திரும்பிப் போ' என்ற கோஷங்களை எழுப்பினர்.

அப்போது நிகழ்ந்த கலவரத்தில் கற்களை வீசித் தாக்குதல் நடத்தப் பட்டது. மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள் போன்றவை எரிக்கப் பட்டன. போலிசார், மத்திய ரிசர்வ் போலிஸ் படை ஆகியோரின் தலையீட்டால் கலவரம் கட்டுப்படுத் தப்பட்டது.

"திரிணாமூல் காங்கிரஸ் கட்சி குண்டர்கள் என்னைத் தாக்க முயன்றனர்," என்று அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ள வேளையில், "பாஜக வெளியில் இருந்து குண்டர்களை அழைத்து வந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளது," என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாகச் சாடியுள் ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!