வாக்களித்தால் பரிசு: இந்தூர் தொகுதி வாக்காளர்கள் உற்சாகம்

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் தொகுதியில் 19ஆம் தேதி நடைபெற உள்ள வாக்குப்பதிவின் போது வாக்காளர்களுக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த ஆடை அணிந்து வாக்களிக்கும் ஆண், பெண், மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிக்கும் கர்ப்பிணி, மூத்த குடிமக்கள், வாக்களிக்கும் சிறந்த தம்பதியர் என பல்வேறு வகைகளில் வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. 

மேலும் வாக்களித்த பின் கைவிரலில் மையுடன் செல்லும் வாக்காளர்களுக்குப் பல கடைகளில் 10 முதல் 30 விழுக்காடு வரை தள்ளுபடி கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.