தொழிலதிபர் கொலை: பெண் கைது

மும்பை: தொழில் போட்டி காரணமாக ஆரிப் சேக் என்ற தொழிலதிபர் தானே பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அண்மையில் பிரசாந்த் சாங்கே உள்ளிட்ட நான்கு பேர் இவரை கடத்திச் சென்று கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். 

போலிஸ் விசாரணையின் போது குஜராத்தில் பதுங்கி இருந்த பிரசாந்த் சிக்கினான். இதையடுத்து ஒரு பெண் உட்பட மேலும் மூன்று பேர் கைதாகி உள்ளனர். ஒரு பெண்ணும் படுகொலைச் சம்பவத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.