சுடச் சுடச் செய்திகள்

அனைத்து விமானங்களையும் காணாமல் போகச் செய்யுங்கள் மோடிஜி என ராகுல் கிண்டல்

போபால்: தேர்தல் களத்தில் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சிப்பது, குற்றம்சாட்டுவது, நையாண்டி செய்வது என பாஜக வினரும் காங்கிரசாரும் பரபரப் பாகச் செயல்படுகின்றனர்.

இந்நிலையில், பாலகோட் தாக்குதலின் போது மேகக்கூட்டம் திரண்டு இருந்ததாகவும், இதனால் பாகிஸ்தானின் ரேடார் கருவிகளில் சிக்காமல் இந்தியப் போர் விமா னங்கள் தப்பித்து விட்டதாகவும் பிரதமர் மோடி கூறியதை காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து கிண்டலடித்து வருகின்றனர்.

இப்பட்டியலில் அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இணைந்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் நடை பெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசியபோது, “நாட் டில் மழை பெய்யும் போதெல்லாம் அனைத்து விமானங்களையும் ரேடாரில் இருந்து காணாமல் போகச் செய்யுங்கள் மோடிஜி,” என்று அவர் குறிப்பிட்டார்.

மேகக்கூட்டத்துக்கு இடையே பறப்பதால் எந்த விமானமும் ரேடார்களில் இருந்து தப்பிவிட முடியாது எனப் பல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

அறிவியல், தொழில்நுட்ப ரீதியில் இது தவறான கூற்று என்று நிபுணர்கள் கூறியிருப் பதைச் சுட்டிக்காட்டியே காங்கிர சார் பிரதமர் பேச்சை கிண்ட லடித்து வருகின்றனர்.

இதேபோல் பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமாருக்குப் பேட்டியளித்த போது, சிறு வயதில் மாங்காய் என்றால் தமக்கு ரொம்பப் பிடிக்கும் எனப் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இப்போதும் மாங்காய் சாப்பிடப் பிடிக்கும் என்றும் கூறினார்.

இதை மறைமுகமாகச் சுட்டிக் காட்டிய ராகுல், “மாங்காய்களை எப்படிச் சாப்பிட வேண்டும் எனக் கற்றுக் கொடுத்த மோடிஜி, வேலையில்லா இளையர்களுக் காக என்ன செய்தீர்கள்?,” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon