பிரதமர் பதவி: கருத்தை மறுத்தார் காங்கிரஸ் தலைவர்

சிம்லா: காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் சிம்லாவில் நேற்று முன்தினம் பேசியபோது, “தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் கட்சி வந்தால்கூட  மாநில கட்சி களில் இருந்து ஒரு தலைவர் பிர தமராக வர விரும்பினால் அதை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும். 

“கங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி வழங்காவிட்டால்கூட அதை ஒரு பிரச்சினையாக மாற்றமாட் டோம்,” எனத் தெரிவித்திருந்தார். 

இதனால், மாநிலக் கட்சித் தலைவர்களில் ஒருவர் பிரதமராக வாய்ப்பு இருக்கலாம் என்னும் கருத்து எழுந்தது. ஆனால், அதை 24 மணிநேரத்துக்குள் மாற்றிப் பேசி பல்டி அடித்துள்ளார் ஆசாத்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் நேற்று காலை பேசிய குலாம் நபி ஆசாத், “பிரதமர் பதவியை காங் கிரஸ் கோராது என்பதில் உண்மை யில்லை. நாட்டிலேயே மிகப் பழமை யான, பெரிய கட்சி காங்கிரஸ். 5 ஆண்டு ஆட்சி செய்யக் கூடியது என்பதால் மிகப்பெரிய கட்சிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்,” என்றார். 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon