‘கோட்சே ஒரு தேசபக்தர்’ என்று கூறிய பாஜக வேட்பாளர் பிரக்யா மீது கடும் கோபம்

புதுடெல்லி: மகாத்மா காந்தியை அவமதித்த பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர் மன்னிப்பு கோரினாலும் அவரை நான் மன் னிக்கத் தயாராக இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் பிரக்யா சிங் தாகூர். தற்போது பிணையில் இருக்கும் அவர், போபால் தெகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட் டது முதலாக பல்வேறு கருத்து களைத் தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

நேற்று முன்தினம் அவர் பேசுகையில், “மகாத்மா காந்தியை சுட்டுக் கென்ற நாதுராம் கேட்சே ஒரு தேசபக்தர். அன்றைக்கு மட்டுமின்றி இன்றைக்கும் என் றைக்குமே அவர் தேச பக்தர்தான்,” என தெரிவித்தார்.

இது பெரும் சர்ச்சையானதை அடுத்து தமது கருத்தை அவர் திரும்பப் பெற்றார்.

இதுபோலவே, பாஜக எம்.பி நளினி குமார் கட்டீல், அனந்த குமார் ஹெக்டே ஆகியோரும் கோட்சே குறித்த சர்ச்சையான கருத்து தெரிவித்தனர்.

இதற்கு பாஜக தலைவர் அமித் ஷா கண்டனம் தெரிவித்து இருந் தார். “கோட்சேவின் செயலை யாரும் நியாயப்படுத்த முடியாது. பாஜகவைச் சேர்ந்த பிரக்யா சிங் தாகூர், அனந்தகுமார் ஹெக்டே கட்டீல் ஆகியோர் தெரிவித்த கருத்துகளில் கட்சிக்கு உடன்பாடு இல்லை. கட்சியின் கொள்கைக்கு முற்றிலும் மாறானவை இவை. 

“மூவரும் தங்கள் பேச்சுக்கு ஏற்கெனவே மன்னிப்பு கோரியுள் ளனர். இருப்பினும் இதுகுறித்து அவர்களிடம் விளக்கம் கோரப் படும். அவர்களிடம் ஒழுங்கு நட வடிக்கை குழு விசாரணை செய்து 10 நாட்களுக்குள் அறிக்கை அளிக்கும்,” என்றார்.

இந்த நிலையில் இந்த விவ காரம் குறித்து பிரதமர் மோடி முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். தனியார் தொலைக் காட்சி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் மோடி கூறுகையில், “மகாத்மா காந்தியை பிரக்யா சிங் தாகூர் அவமதித்துவிட்டார். பண் பட்ட சமூகத்தில் இதுபோன்ற பேச்சுக்கு இடமில்லை.  இதற்காக அவர் மன்னிப்பு கோரியுள்ளார். ஆனாலும் அவரை மன்னிக்க நான் தயாராக இல்லை,” எனக் கூறியுள்ளார்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon