சுடச் சுடச் செய்திகள்

ஆசைக் கனவில் அதிமுக, திமுக

சென்னை: இடைத்தேர்தல் முடிவு கள் தங்களுக்குச் சாதகமாகவே இருக்கும் என்று அதிமுக தரப் பிலும் திமுக தரப்பிலும் உற்சாகம் நிலவுவதாகத் தெரிகிறது. 

அதிமுக ஆட்சி நீடிக்கும் என்று திட்டவட்டமாக நம்பும் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இப்போது அமைச்சராக இருக்கும் ஆறு பேரை வீட்டுக்கு அனுப்பி விட்டு புதிதாகச் சிலரை அமைச் சராக்கலாம் என்று திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் கூறின. 

அந்த ஆறு பேரில் ஒருவர் பெண் அமைச்சர் என்று தெரி கிறது. இவர்கள் அமமுகவுக்கு ஆதரவாக தேர்தலில் பணம் கொடுத்து இருக்கிறார்கள் என்று அதிமுக தலைமைக்குச் செய்தி கிடைத்து இருப்பதாகக் கட்சி யினர் தெரிவித்துள்ளனர். 

வேடசந்தூர் எம்எல்ஏவாக இருக்கும் பரமசிவம் புதிய அமைச்சராகலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. 

அதிமுக நிலவரம் இப்படி இருக்கையில், இடைத்தேர்தல் முடிவுகள் திமுக ஆட்சி அமைய வழிவகுக்கும் என்று இந்தக் கட்சி நம்புகிறது. 

புதிய ஆட்சி அமையும் பட்சத் தில் யார் யாரை என்னென்ன பதவிகளில் அமர்த்தலாம் என்பது குறித்து இந்தக் கட்சியினர் விவா தித்து வருவதாகவும் திமுக தகவல்கள் கூறுகின்றன. 

ஒட்டன்சத்திரம் தொகுதி எம்எல்ஏவாக இருந்து வரும் சக்கரபாணி சபாநாயகராக ஆக் கப்படலாம் அல்லது துரைமுருகன் சபாநாயகர் பொறுப்பை ஏற்கலாம் என்று திமுக தரப்பில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. 

இடைத்தேர்தல் நடக்கும் 22 தொகுதிகளில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் அதிமுக ஆட்சி அகன்று திமுக ஆட்சி அமைய எளிதாக வழி ஏற்பட்டுவிடும். 

அதேவேளையில், சுமார் 10 தொகுதிகளைக் கைப்பற்றிவிட் டால் அதிமுக ஆட்சி தொடர்வ தற்கு வழி பிறந்துவிடும் என்று அரசியல் கணக்கீடுகள் தெரிவிக் கின்றன. 

திமுக, அதிமுக கட்சிகளின் இத்தகைய ஆசைக் கனவுகளில் எந்தக் கனவு நனவாகும் என்பது இம்மாதம் 23ஆம் தேதி தெரிந்து விடும்.  

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon