வழக்குகளை எதிர்நோக்கும் 38 சட்டசபை வேட்பாளர்கள்

சென்னை: தமிழ்நாட்டில் நடக்கும் 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் போட்டியிடக்கூடிய ஐந்து பெரிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர் களில் 38 பேருக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் நிலுவை யில் இருக்கின்றன. 

தேர்தல் சீரமைப்பு இயக்கம் என்ற ஓர் அமைப்பு, சென்னையில் வெளியிட்டு உள்ள ஓர் அறிக் கையின் மூலம் இது தெரிகிறது. 

 

இடைத்தேர்தல் வேட்பாளர் களுக்கு எதிராக மொத்தம் 113 குற்றவியல் வழக்குகள் நிலுவை யில் உள்ளன. அவற்றில் 63 வழக்குகளை திமுகவைச் சேர்ந்த 15 வேட்பாளர்கள் எதிர்நோக்கு கிறார்கள். 

தினகரன் தலைமையிலான அமமுக இதில் அடுத்த இடத்தைப் பெறுகிறது. இந்தக் கட்சியைச் சேர்ந்த 11 சட்டசபை வேட்பாளர் கள் 29 குற்றவியல் வழக்குகளை எதிர்நோக்குகிறார்கள்.

ஆளும் அதிமுக கட்சியைச் சேர்ந்த நான்கு வேட்பாளர்களுக்கு எதிராக ஆறு வழக்குகள் நிலுவை யில் உள்ளன. ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக வழக்கு குறைந்த அளவில் இருப் பதற்கு அந்தக் கட்சி அதிகாரத்தில் இருப்பதே காரணம் என்று எதிர்த் தரப்பினர் கூறுகிறார்கள். 

கமல்ஹாசனின் மநீம கட்சி யைச் சேர்ந்த மூன்று வேட்பாளர் களுக்கு எதிராக சில வழக்குகள் இருக்கின்றன. நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஐந்து வேட்பாளர்களுக்கு எதிராக 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

திமுகவின் பூண்டி கலை வாணன், செந்தில் பாலாஜி, ஆர்டி சேகர், சண்முகையா, சத்யா எஸ்ஏ, காத்தவராயன், மகாராஜன் ஆகி யோர் இதில் குறிப்பிடத்தக்க வர்கள். அமமுகவின் பி. வெற்றிவேலுவுக்கு எதிராக ஆறு வழக்கு கள் நிலுவையில் இருக்கின்றன.