கமல்ஹாசன்: இந்து என்ற பெயர் இந்தியப் பெயரல்ல

சென்னை: சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஓர் இந்து என்று பேசி அரசியல் களத்தில் பெரும் பிரச்சினையைக் கிளப்பி விட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி யின் தலைவர் கமல்ஹாசன், அந்தப் பிரச்சினையின் வேகம் தணிவதற்கு முன்பாக மேலும் ஒரு சர்ச்சையைக் கிளப்பி இருப்ப தாகத் தெரிகிறது. 

‘இந்து’ என்ற சொல் இந்தியா வுக்குச் சொந்தமானது அல்ல என்றும் அந்தப் பெயரை இந்தி யாவை ஆள்வதற்கு வந்த முக லாயர்கள் அல்லது வேறு யாராவது கொடுத்து இருக்கலாம் என்றும் அப்படி கொடுக்கப்பட்ட பெயரை பிரிட்டிஷ் நிர்வாகத்தினர் வழி மொழிந்து இருக்கிறார்கள் என்றும் டுவிட்டரில் கமல் இப்போது தெரி வித்துள்ள கருத்து மீண்டும் ஒரு பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது. 

நடிகராக இருந்து அரசியல் வாதியாக மாறியிருக்கும் கமல், சூலூரில் இடைத்தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி கிடைக்காமல் போனதை அடுத்து இணையச் சமூக ஊடகம் பக்கம் சாய்ந்து கருத்துகளைத் தெரிவித்தார். 

இணையத்தில் பதிவேற்றிய சுமார் மூன்றரை நிமிட காணொளி யில் ‘மாற்ற வேண்டியவர்களை மாற்றிவிட்டால் இந்த நாடே மாறி விடும்’ என்று கமல் கூறினார். 

அதோடு நின்றுவிடாமல், தான் தெரிவித்து வரும் கருத்துகளுக்கு ஆதரவாக டுவிட்டரில் வெள்ளிக் கிழமை புதிய கருத்துகளை அவர் பதிவேற்றினார். 

தமிழ்நாட்டில் ஆழ்வார்களோ, நாயன்மார்களோ ‘இந்து’ என்ற வார்த்தையைச் சொல்லவில்லை என்று குறிப்பிட்டு உள்ள கமல் ஹாசன், நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும்போது மாற்றான் கொடுத்த பட்டத்தைப் பெயராக, மதமாகக் கொள்வது அறியாமையையே குறிக்கிறது என்று குறிப்பிட்டு உள்ளார். 

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற தமிழ்ப் பழமொழியைச் சுட்டிய அவர், இந்தியாவைச் சம யத்திற்குள் சுருக்குவது வர்த்தக ரீதியில், அரசியல் ரீதியில், ஆன் மிக ரீதியில் தவறான ஒரு முயற்சி என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

நடிகர் கமல்ஹாசன் சில நாட் களுக்கு முன் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது சுதந்திர ‘இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஓர் இந்து என்றும் அவர்தான் நாதுராம் கோட்சே என்றும் குறிப்பிட்டு இருந்தார். 

இதற்கு பாஜக, அதிமுக உள் ளிட்ட அரசியல் கட்சிகளும் இந்து அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. கமலுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. திருப் பரங்குன்றம், அரவக்குறிச்சியில் பிரசாரம் செய்த கமலை நோக்கி செருப்பு, கல், முட்டை வீசப்பட்டன. 

சூலூர் தொகுதியில் இறுதி நாள் பிரசாரம் செய்ய திட்டமிட் டிருந்த கமலுக்கு அனுமதி மறுக் கப்பட்டது. இதனை அடுத்து அவர் இணையத்தை நாடினார். 

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்