நான்கு தொகுதிகளில் அரவக்குறிச்சியில் அதிக வாக்குப் பதிவு, அதிக புகார் 

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் வாக்காளர்கள் பரபரப்பாக வாக்களித்தனர்.

ஐந்து கட்சிகள் போட்டியிடும் அந்தத் தொகுதிகளில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு முக்கிய கட்சிகளுக்கு இடையில் பரபரப்பு களும் பரஸ்பர புகார்களும் இடம் பெற்றன.

என்றாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கையில், இந்நான்கு தொகுதி களிலும் மறுவாக்குப்பதிவு நடந்த 13 வாக்குச்சாவடிகளிலும் வாக் களிப்பு அமைதியாக நடந்து முடிந் ததாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரி வித்தார்.

இடைத்தேர்தல் நடந்த நான்கு தொகுதிகளில் அரவக்குறிச்சியில் தான் அதிக வாக்குகள் பதிவான தாகத் தெரியவந்தது.

நேற்று மாலை 3 மணி நிலவரப் படி, அரவக்குறிச்சியில் 66.38% வாக்குகள் பதிவாகின. சூலூர் தொகுதியில் 58.06%, திருப்பரங் குன்றம் தொகுதியில் 56.25%, ஓட்டப்பிடாரத்தில் 52.17% வாக்கு கள் பதிவானதாக தேர்தல் அதி காரி தெரிவித்தார்.

வாக்களிப்பு நடந்தபோது அரவக்குறிச்சியில் திமுக தொண் டர்களுக்கும் காவல்துறையினருக் கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து சில இடங் களில் போலிஸ் குவிக்கப்பட்டது.

அந்தத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி இடைத் தேர்தலை போலிசார் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு விட்டார்கள் என்று கடுமையாகக் குறைகூறினார்.

ஆளும் கட்சிக்குச் சார்பாக அவர்கள் செயல்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு கட்டத்தில் ஒரு வாக்குச் சாவடி அருகே கூடிய திமுக தொண்டர்களைக் காவல்துறை யினர் கலைத்து விரட்டினர். அந் தத் தொகுதியில் 174வது வாக்குச் சாவடியில் கூட்டமாகத் திரண் டிருந்த வாக்காளர்களைக் கலைக்க போலிசார் தடியடி நடத் தியதில் இரண்டு பெண்கள் காயம் அடைந்ததால் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

அரவக்குறிச்சி தொகுதியில் பள்ளப்பட்டியில் வாக்களிக்க குட்டி பேருந்தில் வந்தவர்களை போலிஸ் தடுத்து நிறுத்தி அவர் களின் வாக்காளர் அட்டைகளைச் சோதித்து பிறகு அனுமதித்தது.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் ஒட்டநத்தம் என்ற வாக்குச் சாவடி யில் வாக்கு இயந்திரம் கோளாறு காரணமாக வாக்களிப்பு தாமத மானது. ஓட்டப்பிடாரம் தொகுதிக் குட்பட்ட அயிரவன்பட்டி வாக்குச் சாவடியில் திடீரென வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் வாக் களிப்பு நிறுத்தப்பட்டதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.

அரவக்குறிச்சியில் வாக்காளர் களை அடைத்துவைத்து வாக்குப் போடவிடாமல் தடுத்தார் என்று அதிமுகவினர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது புகார் தெரி வித்தனர்.

இடைத்தேர்தல் நடந்த ஓட்டப் பிடாரம் தொகுதியில் 233,847 வாக்காளர்கள் உள்ளனர்.

கோவை மாவட்டம், சூலூரில் 295,158 வாக்காளர்கள் இருக் கிறார்கள். கரூர் மாவட்டம் அரவக் குறிச்சியில் 205,273 வாக்காளர் கள் வாக்களிக்கிறார்கள்.

கடந்த மூன்றாண்டுகளில் இரண்டாவது முறையாக இடைத் தேர்தல் நடக்கும் திருப்பரங்குன் றத்தில் 304,478 வாக்காளர்கள் உள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர் கள் நேற்று வாக்களித்தனர்.

சூலூரில் 22 வேட்பாளர்களும் அரவக்குறிச்சியில் 63 பேரும் திருப்பரங்குன்றத்தில் 37 பேரும் ஒட்டப்பிடாரத்தில் 17 பேரும் போட்டியிடுகிறார்கள்.

மொத்த வேட்பாளர்கள் 137 பேரில் ஐந்து பேர் பெண்கள். அதிமுக, திமுக, அமமுக, மநீம, நாம் தமிழர் கட்சி ஆகிய ஐந்து கட்சிகள் போட்டி போடுகின்றன.

இவ்வேளையில், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, கட லூர் பண்ருட்டி, திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் பெரியகுளம் ஆகிய இடங்களில் நேற்று 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடந்ததாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டது.

தேர்தல் முடிவுகள் மே 23ல் வெளியாகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!