ராகுல், சோனியாவை சந்தித்தார் சந்திரபாபு

புதுடெல்லி: மத்தியில் பாஜக அரசை அகற்ற வேண்டும் என்ப தற்காக தாம் மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளை மேலும் தீவிரப் படுத்தி உள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. இதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந் தியை அவர் இரண்டாவது முறை யாகச் சந்தித்தார்.

அப்போது மத்தியில் அடுத்து ஆட்சி அமைப்பது குறித்தும் அடுத்து யாரைப் பிரதமராக்குவது என்பது குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று சோனியா காந்தியையும் சந்தித்துப் பேசினார் சந்திரபாபு நாயுடு.

நடந்து முடிந்துள்ள நாடாளுமன் றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். மேலும் பல்வேறு கருத்துக் கணிப்புகளின் முடிவும் இவ்வாறே அமைந்துள்ளன. இதை யடுத்து மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்றும் அந்தக் கட்சிகளின் ஆதரவுடன் தான் மத்தியில் அடுத்த ஆட்சி அமையும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பாஜகவை ஆட்சி யில் இருந்து அகற்றவேண்டும் என்பதற்காக தீவிர களப்பணி ஆற்றி வருகிறார் சந்திரபாபு. மத்தியில் புதிய ஆட்சி அமைப்பது குறித்து ராகுலிடம் ஏற்கெனவே ஒருமுறை ஆலோசனை நடத்தி யுள்ள அவர், நாடாளுமன்றத் தேர் தலுக்கான கடைசிக் கட்ட வாக்குப்பதிவு நடப்பதற்கு முன்பு மீண்டும் ராகுலைச் சந்தித்துள்ளார்.

மேலும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், மாயாவதி, அகிலேஷ் யாதவ், சீதாராம் யெச்சூரி ஆகி யோரையும் சந்தித்துப் பேசியுள்ளார் சந்திரபாபு நாயுடு.

தேர்தல் முடிவுகள் வெளியான பின் மேற்கொள்ள வேண்டிய நடவ டிக்கைகள் குறித்து இத்தலைவர்க ளுடன் சந்திரபாபு ஆலோசித்ததாக அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக தேசியவாத காங்கி ரஸ் தலைவர் சரத்பவார், சரத் யாதவ் உள்ளிட்டோரையும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார் சந்திரபாபு நாயுடு.

இதற்கிடையே சந்திரபாபு நாயுடு அமைக்க விரும்பும் அணியை சுலபத்தில் அமைக்க இயலாது என்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கூறியுள்ளது.

மாறாக அக்கட்சித் தலைவரும் தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ் காங்கிரஸ், பாஜக அல்லாத அணியை உரு வாக்க மேற்கொண்டுள்ள முயற்சி வெற்றிபெறவே அதிக வாய்ப்பு உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!