தேர்தலுக்கு முன்பே விரலில் மை வைத்து, கையில் பணம் தந்ததாக கிராம மக்கள் புகார்

லக்னோ: தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளில் பாஜகவைச் சேர்ந்த சிலர் தங்கள் கைவிரலில் மை வைத்துச் சென்றதாக கிராம மக்கள் தெரிவித்துள்ள புகார் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று நாடாளுமன்றத் தேர்த லுக்கான கடைசிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. அந்த வகை யில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள தாராஜீவன்பூர் என்ற கிராமத்தில் வாக்குப்பதிவு நடந்தது.

இந்நிலையில் நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே ஜீவன்பூர் கிராமத்தைச் சேர்ந்த சிலர் உள்ளூர் காவல் நிலையத் திற்குச் சென்று புகார் மனு ஒன்றை அளித்தனர்.

பாஜகவைச் சேர்ந்த மூவர் நேற்று முன்தினம் தங்கள் கிராமத் துக்கு வந்ததாகவும் தங்கள் கைவிரல்களில் வாக்களிக்கும் போது வைக்கப்படும் மையை வைத்துச் சென்றதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

கிராம மக்களுக்குத் தலா 500 ரூபாய் வழங்கிய அம்மூவரும் இனி யாரும் வாக்களிக்க முடி யாது என்பதால் ஞாயிற்றுக்கிழமை வாக்குச்சாவடிக்கு வரத் தேவை இல்லை என்றும் கிராம மக்களின் வாக்கைத் தாங்களே பதிவு செய்து விடுவதாகவும் கூறியதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

வாக்குப்பதிவுக்கு முன்பே மை வைக்கப்பட்டது குறித்து வெளியே யாரிடமும் சொல்லவேண்டாம் என்றும் பாஜகவினர் கேட்டுக் கொண்டதாக கிராம மக்கள் கூறி உள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தேர்தல் அதிகாரிகள் ஜீவன்பூர் கிராம மக்கள் வாக்களிக்க வாய்ப்புத் தரப்படும் எனத் தெரி வித்தனர். இதுபற்றி உரிய விசாரணை நடத்த எதிர்க்கட்சி கள் வலியுறுத்தி உள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!