மோடியின் யாத்திரை குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார்

இந்திய மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் ஒருசில இடங்களில் வன்செயல் சம்பவங்கள் அரங்கேறின. குறிப் பாக, மேற்கு வங்காளத்தில் கை கலப்புகளும் கார்களைச் சேதப் படுத்திய சம்பவங்களும் அதிக மாக நிகழ்ந்தன.

இம்மாநிலத்திலுள்ள ஒன்பது மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்றுக் காலை தொடங்கிய சிறிது நேரத்தில் டைமண்ட் ஹார்பர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நிலஞ் சன் ராயின் காரை மர்ம நபர்கள் சிலர் உடைத்தனர். அச்சம்ப வத்தைத் தொடர்ந்து விரைந்து சென்ற போலிசார் காரைச் சேதப் படுத்தியவர்களைத் தேடினர்.

இந்நிலையில், பாஜக மாவட்டத் தலைவர் ஒருவரையும் அவரது ஓட்டுநரையும் திரிணாமூல் காங் கிரஸ் கட்சியின் தொண்டர்கள் தாக்கியதாகவும் பின்னர் அந்தத் தலைவரின் காரைச் சேதப்படுத்தி யதாகவும் அனுபம் ஹஸ்ரா என் னும் பாஜக வேட்பாளர் செய்தி யாளர்களிடம் கூறினார்.

52க்கு மேற்பட்ட வாக்களிப்பு மையங்களில் பொதுமக்களை வாக்களிக்கவிடாமல் திரிணா மூல் கட்சியினர் தடுத்துவருவதாக வும் அவர் கூறினார்.

அவரைப்போலவே மற்றொரு பாஜக வேட்பாளரான சயந்தன் பாசுவும் இதே புகாரைத் தெரி வித்தார். பசிராட் வாக்களிப்பு மையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வாக்காளர்களை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் வாக் களிக்கவிடாமல் தடுத்துவிட்ட தாகவும் அவர் கூறினார்.

ஆக, நேற்று வாக்குப்பதிவு நடைபெற்ற எட்டு மாநிலங்களில் மேற்கு வங்காளத்தில் மட்டுமே சட்டத்துக்குப் புறம்பான சம்பவங் கள் அதிகம் நிகழ்ந்ததாக ஊட கங்கள் குறிப்பிட்டன.

இந்நிலையில், பிரதமர் மோடி கேதார்நாத் குகைக் கோயிலுக்குச் சென்றது குறித்து தேர்தல் ஆணையத்திடம் திரிணாமூல் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டெரின் ஓபிரையன் ஆணையத்திடம் அளித்துள்ள கடிதத்தில், "பிரசாரம் வெள்ளிக் கிழமை மாலையே நிறைவுற்ற போதிலும் பிரதமர் மோடியின் கேதார்நாத் யாத்திரை எல்லா தேசிய, உள்ளூர் தொலைக்காட்சி களில் இரு நாட்களாக திரும்பத் திரும்ப ஒளிபரப்புச் செய்யப்பட் டன. இதன்மூலம் தேர்தல் நடத்தை விதிகளை மோடி அப் பட்டமாக மீறிவிட்டார்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு புகார் அளிக்கப் பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி, 68, தேர்தல் ஆணையத் துக்கு நன்றி தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் நடப்பில் இருக்கும் வேளையில் கேதார்நாத் கோயிலுக்குச் செல்ல தம்மை அனுமதித்ததற்காக அவர் அந்த நன்றியைத் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் பிர சாரத்தில் ஒரு மாதத்திற்கு மேல் ஈடுபட்டு வந்த பிரதமர் மோடி, நேற்று முன்தினம் உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத் தில் 11,755 அடி உயரத்தில் அமைந்துள்ள கேதார்நாத் கோயி லுக்குச் சென்றார்.

அங்கு வழிபாடு நடத்திய பின்னர் குகைக் கோயிலுக்குள் சென்று நேற்றுக் காலை வரை தியானத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரைச் சந்தித்த செய்தியாளர் கள், "தேர்தல் வெற்றிக்காக பிரார்த்தனை செய்தீர்களா?," என்று கேட்டனர். அதனை மறுத்த திரு மோடி, "எனக்காக இறை வனிடம் எதையும் கேட்பது என் பது என் இயல்பு அல்ல," என் றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!