அதிக இடங்களில் திமுக வெற்றிபெற வாய்ப்பு

சென்னை: முக்கிய ஊடகங்கள் பலவும் இணைந்து நடத்தியுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் திமுக, காங்கிரஸ் கூட் டணி தமிழகத்தில் 29 இடங் களைக் கைப்பற்றும் என்று தெரிய வந்துள்ளது. 

தமிழகத்தைப் பொறுத்தவரை யில் திமுக தலைமையிலான கூட் டணி அதிக இடங்களைப் பிடிக் கும் எனவும் அதிமுக கூட்டணி குறைவான இடங்களை மட்டுமே கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் பல  ஊடகங்களும் தெரிவித்துள்ளன.

அதேவேளையில் தேர்தலுக்குப் பின் நடத்தப்பட்ட இந்த  கருத்து கணிப்புகள் நடக்காமல் போவதற் கும் வாய்ப்புள்ளது. உறுதியான முடிவுகள் மே 23ஆம் தேதி மாலையில் வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக குறைந்த இடங்களையே பிடிக்கும் என்பது கருத்துக் கணிப்பு அல்ல, கருத்துத் திணிப்பு,” எனத் தெரிவித்துள்ளார். 

டைம்ஸ் நவ்-விஎம்ஆர் ஊட கங்களின் கருத்துக் கணிப்பின் படி,  திமுக கூட்டணி 29 இடங் களிலும் அதிமுக கூட்டணி 9 இடங்களிலும் வெற்றிபெற வாய்ப் புள்ளதாகத் தெரிவித்துள்ளன. 

அதேநேரம் நியூஸ் எக்ஸ்-நேத்தா வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் திமுக 17 இடங்களிலும் அதிமுக 8 இடங்களிலும் காங் கிரஸ் 3 இடங்களிலும் பாஜக ஒரு இடத்திலும் மற்ற கட்சிகள் 9 இடங்களையும் பிடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று சிஎன்என் நியூஸ் 18 வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பின்படி, திமுக கூட்டணி 22-24 இடங்களிலும் அதிமுக கூட்டணி 14-16 இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

திமுக 20 இடங்கள், அதிமுக 10 இடங்கள், காங்கிரஸ் 6 இடங்கள், பாஜக இரண்டு இடங் களைக் கைப்பற்ற வாய்ப்பிருப்ப தாக இந்தியா டிவி கூறியுள்ளது.

நியூஸ் 24-டுடேஸ் சாணக்யா வெளியிட்டுள்ள கணிப்பின்படி, திமுக 31 இடங்களிலும் அதிமுக 6 இடங்களிலும் மற்றவை 1 இடத்திலும் வெற்றிபெற வாய்ப் புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதேபோல திமுக கூட்டணி 34 முதல் 38 இடங்களிலும் அதிமுக கூட்டணி 0 முதல் 4 இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக இந்தியா டுடே தெரி வித்துள்ளது.

அதிமுக கூட்டணி 11 இடங் களிலும்  திமுக கூட்டணி 26 இடங்களிலும் மற்றவை 1 இடத் திலும் வெற்றிபெறலாம் என  என்டிவி ஊடகம் கூறியுள்ளது.

இந்நிலையில், சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர் களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “திமுகவை பொறுத்தவரை கருத் துக் கணிப்புகள் சாதகமாக வந்தா லும் ஒருவேளை பாதகமாக வந்தா லும் அதைப் பொருட்படுத்துவதற் கில்லை. மே 23ல் வெளியாகும் மக்கள் கணிப்புக்காகக் காத்திருக்கிறோம்,” என்றார்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon