சுடச் சுடச் செய்திகள்

பாஜக குறித்து விமர்சித்த அமைச்சர் அதிரடி நீக்கம்

லக்னோ:  உத்தரபிரதேச மாநில அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க ஆளுநரிடம் முதல்வர் ஆதித் யநாத் செய்த பரிந்துரை உடனடி யாக ஏற்கப்பட்டது.

சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவராக உள்ளார் ஓம்பிரகாஷ் ராஜ்பர். இக்கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீண்ட காலமாக அங்கம் வகிக்கி றது. 

இந்நிலையில் மக்களவைத் தேர்தலின்போது பாஜக தலைமை தனக்குரிய பிரதிநிதித்துவத்தை தரவில்லை என்று அதிருப்தி வெளியிட்ட ராஜ்பர், தேர்தலில் தாம் சொந்தச் சின்னத்தில் போட் டியிட பாஜக தலைமை அனுமதி மறுத்தது கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார்.

மேலும் தேர்தல் நேரத்தில் பாஜ கவுக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்தி வந்த அவர், தேர்தலில் பாஜக படுதோல்வி அடையும் என்றும் கூறினார்.

தமக்கு ஒரு தொகுதியை ஒதுக்க மறுத்த பாஜக, 50 இடங் களை இழக்கும் என்றும் தெரி வித்திருந்தார். இந்நிலையில் தேர் தலுக்கான வாக்குப்பதிவு முடிவ டைந்த கையோடு, ராஜ்பரால் கடும் தர்மசங்கடத்துக்கு ஆளாகியிருந்த பாஜக தலைமை, அவரை அமைச் சரவையில் இருந்து நீக்கியுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon