67.11%: இந்தியத் தேர்தலில் வரலாறு காணாத வாக்குப்பதிவு

இந்தியாவின் மக்களவைத் தேர் தலில் இதுவரை இல்லாத அள வுக்கு 67.11% வாக்குகள் பதிவாகி உள்ளன. 

நாடு முழுவதும் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடை பெற்ற தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளே இந்திய மக்களவைத் தேர்தல் வரலாற்றில் ஆக அதிகமா னது என்று தனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில்  ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி தெரிவிக்கிறது. கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் 66.04% வாக்குகள் பதிவாகின. 

இது மொத்தம் 543 தொகுதி களிலும் பதிவானது. இம்முறை வேலூர் தொகுதி வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 542 தொகுதிகளில் 67.11% என்பது ஆக அதிகம். 

இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள இந்த விகிதத்தில் மாற்றம் ஏற்படலாம் என்றும் அச் செய்தி கூறுகிறது.

2014 தேர்தலைக் காட்டிலும் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந் தவர்கள் இத்தேர்தலில் கிட்டத் தட்ட 70 மில்லியன் பேர் அதிகம். 

வாக்குப்பதிவு அதிகரித்ததற்கு அதுவும் ஒரு காரணமாக இருக் கக்கூடும். 

இதற்கு முன் நடைபெற்ற 2009 தேர்தலில் 56.9 விழுக்காட்டினரே வாக்களித்திருந்தனர்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon