மதுரையில் வாக்கு எண்ணும் மையத்தில் திடீர் பரபரப்பு

மதுரை: உரிய அனுமதியின்றி நகல் எடுக்கும் இயந்திரங்கள் சில வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக மதுரையில் எதிர்க்கட்சியினர் புகார் எழுப்பி உள்ளனர்.

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உரிய வாக்குகளை எண்ணும் மையத்துக்கு நேற்று முன்தினம் இரவு சரக்கு வாகனத்தில் நகல் எடுக்கும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. 

எனினும் தேர்தல் அலுவலரின் கடிதம் இன்றி அவை கொண்டு வரப்பட்டதால் சுயேச்சை வேட்பா ளர்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக் கப்பட்டது. 

இது குறித்து விவரம் அறிந்த திமுக வேட்பாளர் சரவணனும் அங்கு வந்து தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.

இதையடுத்து வாக்கு எண்ணும் மையமான மருத்துவக் கல்லூரி வளாகத்திலேயே அந்த வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையே வாக்கு எண் ணிக்கை முடிவுகளை வெளியிடு வதில் சற்று தாமதம் ஏற்பட்டாலும், எந்தவிதத் தவறும் இல்லாமல் அவற்றைத் துல்லியமாகத் தருவதில் உறுதியாக இருப்பதாக மதுரை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர் தல் நடத்தும் அதிகாரியுமான நாகராஜன் தெரிவித்துள்ளார்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon